வரும் அக்டோபர்
26ல் வர்த்தக ரீதியாக, விண்டோஸ் 8 வெளியாக உள்ளது. புதியதாக, இதனைத் தங்கள்
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்க திட்டமிடுபவர்கள் எடுக்க
வேண்டிய முன் நடவடிக்கைகளை இங்கு காணலாம்.
இங்கு கூறப்படும் செயல்பாடுகள், டெஸ்க்டாப் அல்லது நோட்புக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 பதிந்து செயல்படுத்துபவர்களுக்கு மட்டுமே.
1. அப்டேட் சோதனை:
இந்த செயல்பாடு,
எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, லினக்ஸ், ஓ.எஸ்.எக்ஸ், விண்டோஸ் எக்ஸ்பி
அல்லது விண்டோஸ் 8 என, பதிவு செய்வதாக இருந்தாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய
ஒன்றாகும்.
உங்கள்
கம்ப்யூட்டரில் பதிந்து இருக்கும் அல்லது பாதுகாப்பு புரோகிராம்கள்,
அண்மைக் காலத்திய அப்டேட் புரோகிராம்களுடன் மேம்படுத்தப் பட்டுள்ளதா
என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்டேட் புரோகிராம்கள் தான் நாம்
நம்பி எதிர்பார்க்கும் பாதுகாப்பினை முழுமையாகத் தரும்.
எனவே
ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்படும் முன், பாதுகாப்பு புரோகிராம்களை அப்டேட்
செய்து வைத்துக் கொள்ளவும். அல்லது அந்த புரோகிராம்களைக் குறித்து வைத்து,
சிஸ்டம் பதிந்தவுடன் அப்டேட் செய்திடவும்.
2. தன் விருப்பத்துடன் செட்டிங்ஸ் அமைப்பு:
இது தனிப்பட்ட
நபர்களுக்கானது என்றாலும், நாம் பயன்படுத்த இருக்கும் கம்ப்யூட்டர்களை,
அவற்றின் பயன்பாட்டு நோக்கில் செட் செய்வது நல்லது. சில பெர்சனல்
கம்ப்யூட்டர்களில், நம் வேலைகளை மேற்கொள்வோம். சிலவற்றில், வேடிக்கையான
விளையாட்டுக்களை மேற்கொள்வோம்.
இந்த வகையில்
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், டெஸ்க்டாப்பினைக் குறிக்கும் டைல் கட்டத்தினை,
ஸ்டார்ட் ஸ்கிரீனில் மேல் இடது பக்கம் அமைத்தால் நல்லது. இந்த நிலையில்
வைத்தால், என்டர் தட்டியவுடன் நீங்கள் டெஸ்க்டாப்பில் இருப்பீர்கள்.
3. கம்ப்யூட்டரை நம்புங்கள்:
இதுவும் தன்
விருப்ப நிலைக்கேற்ப அமைக்கும் ஒரு வழி தான். நீங்கள் ஸ்கை ட்ரைவ் போன்ற
வசதியைப் பயன்படுத்துபவராக இருந்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின்
நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. டைல்ஸ் ட்யூனிங்:
மைக்ரோசாப்ட்
தன் மெட்ரோ யூசர் இன்டர்பேஸ் பெயர் குறித்து மாற்றங்களை மேற்கொண்டாலும்,
விண்டோஸ் 8 செயல்படுவதில், அதில் தரப்பட்டிருக்கும் டைல்ஸ் என்ற கட்ட
ஓடுகள், நிச்சயம் பெரிய அளவில் செயல்படுகின்றன. எனவே, உங்கள் விருப்பத்
தேவைகளுக்கேற்ப இந்த டைல்ஸ்களை நீக்கிவிடலாம் அல்லது அளவினைச் சுருக்கி
வைக்கலாம்.
5. அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்ஸ்:
கட்டங்களை
அமைப்பதில், அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்ஸ் உள்ள கட்டத்தினை ஸ்டார்ட்
ஸ்கிரீனுக்குக் கொண்டு செல்லலாம். விண்டோஸ் சிஸ்டத்தினை அடிக்கடி கன்பிகர்
செய்பவர்களுக்கு, இது முக்கிய தேவையாக இருக்கும். அதற்குத் தேவையான
டூல்ஸ்களை எல்லாம், இந்த கட்டத்தில் ஒருங்கிணைத்து அமைக்கலாம்.
6. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் டெஸ்க் டாப்பில்:
இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இணைந்து தரப்படுகிறது.
இந்த பிரவுசரை முழுத் திரையில் செயல்படுத்த வேண்டியதில்லை. எனவே இதனை
டெஸ்க் டாப் வகையில் இயக்குமாறு மாற்றிக் கொள்ளலாம்.
7.லாக் ஸ்கிரீன்:
டெஸ்க்டாப்
பெர்சனல் கம்ப்யூட்டரில், சிஸ்டம் நம் பாஸ்வேர்டுக்காகக் காத்திருக்கையில்,
லாக் ஸ்கிரீன் காட்டப்படுவது தேவையில்லை. குரூப் பாலிசி எடிட்டர்
உதவியுடன் இந்த லாக் ஸ்கிரீனை செயல் இழக்க வைக்கலாம்.
8. உங்கள் அப்ளிகேஷன் பதிவு:
விண்டோஸ் 8
சிஸ்டத்தில் நிறைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரப்பட்டாலும், சில தர்ட்
பார்ட்டி அப்ளிகேஷன்களை நாம் பயன்படுத்துவோம். எடுத்துக் காட்டாக, சிலரின்
விருப்பமான பிரவுசர் குரோம் அல்லது பயர்பாக்ஸ் ஆக இருக்கலாம். எனவே இவற்றை
இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
9. டைல்ஸ்களில் குழுக்கள்:
நமக்கு வேண்டிய
அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்தவுடன், நம் வசதிக்கேற்றபடி,
இவற்றை குழுக்களாக டைல்ஸ்களில் அமைக்கலாம். இதற்குச் சற்று நேரம்
பிடிக்கலாம்; ஆனால், பின்னால், இவற்றைச் செயல்படுத்துகையில் இந்த அமைப்பு
நம் வேலையை எவ்வளவு எளிதாக அமைக்கிறது என்பதனை உணர்வீர்கள்.
இதே போல, டாஸ்க்
பாரில் எந்த புரோகிராம்களை பின் செய்து வைப்பது என்பதனையும் திட்டமிட்டு
செயல்படுத்தலாம். பலர் டெஸ்க்டாப்பில் தங்களுக்குத் தேவையான ஐகான்களை
வைத்திட விரும்புவார்கள். ஆனால் டாஸ்க் பாரில் பின் செய்திடும் வசதி
இருக்கையில், இது தேவையில்லை.
10. பைல் ஹிஸ்டரி இயக்கவும்:
விண்டோஸ் 8
சிஸ்டத்தில் அனைவரும் சிறந்தது எனப் பாராட்டும் வசதி,பைல் ஹிஸ்டரி ஆகும்.
இதன் மூலம் பைல்கள் தானாகவே பேக் அப் செய்யப்படும். எனவே இதனை முக
முக்கியமான முதல் பணியாக எடுத்துச் செய்திட வேண்டும்.
இது போல நீங்கள்
முன்னிலைப்படுத்த விரும்பும் செயல்பாடுகளையும், விண்டோஸ் 8 சிஸ்டம்
பதிந்தவுடன் மேற்கொள்ள வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாகப்
பயன்தரும் வகையில் இயக்குவது எளிதாக இருக்கும்.
Read more: http://therinjikko.blogspot.com/#ixzz28RLRtSX9
No comments:
Post a Comment