Oct 5, 2012

வேர்டில் டாகுமெண்டில் சிறப்பு அடையாளங்கள் பெற

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும்.

இங்கே அவை தரப்படுகின்றன. இதனை அமைக்கையில் எழுத்துக்களுக்கு மேலே உள்ள எண்களை அழுத்தக் கூடாது. நம் லாக் கீயினை அழுத்தி அத்துடன் தரப்பட்டுள்ள எண்களுக் கான பேடிலிருந்து எண்களை டைப் செய்திட
வேண்டும்.



† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற ஆல்ட் + 0134

‡ இதனையே இரட்டையாகப் பெற ஆல்ட் + 0135

™ டிரேட் மார்க் அடையாளம் ஏற்படுத்த ஆல்ட்+0153

£ பவுண்ட் ஸ்டெர்லிங் அடையாளம் பெற ஆல்ட் + 0163

¥ ஜப்பானிய கரன்சியான யென் அடையாளம் பெற ஆல்ட்+0165

© காப்பி ரைட் அடையாளம் கிடைக்க ஆல்ட் + 0169

® ரெஜிஸ்டர்ட் ட்ரேட் மார்க் அடையாளம் உண்டாக்க ஆல்ட்+0174

° டிகிரி என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற ஆல்ட் +0176

± பிளஸ் ஆர் மைனஸ் என்பதனைக் காட்ட ஆல்ட்+0177

² சூப்பர்ஸ்கிரிப்ட் 2 என்பதனைக் காட்ட ஆல்ட் +178

³ சூப்பர்ஸ்கிரிப்ட் 3 என்பதனைக் காட்ட ஆல்ட் +179

· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த ஆல்ட்+0183

¼ கால் என்பதைக் குறிக்க ஆல்ட் + 0188

½ அரை என்பதைக் குறிக்க ஆல்ட் + 0189

¾ முக்கால் என்பதனைக் குறிக்க ஆல்ட் + 0190

இந்த கால், அரை மற்றும் முக்கால் பின்னங்களை ஒரே கேரக்டரில் அமைக்க அதனை 1/4, 1/2, 3/4 என டைப் செய்து ஸ்பேஸ் பார் தட்டினால் அவை ¼,½,¾ எனத் தானாகவே அமைக்கப் பட்டுவிடும்.

இன்னும் பல குறியீடுகளை இதேபோல ஏற்படுத்தலாம். மேலே தரப்பட்டுள்ளவை நாம் அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்கும் குறியீடுகளே.

மேலும் பல குறியீடுகளும் அவற்றைத் தரும் கீ தொகுதிகளையும் காண http://home.earthlink.net/~awinkelried/keyboard_shortcuts.html என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.


Read more: http://therinjikko.blogspot.com/2012_09_01_archive.html#ixzz28RS8CibV


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...