
இந்த
சிக்கலைத் தீர்க்கவே, அரசு மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை தரும் இன்னொரு
நிறுவனத்தில் இணைந்து கொள்ளும் வசதியை அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும்
என்ற ஆணையைப் பிறப்பித்து அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தியது.
சென்ற
ஏப்ரலில் மட்டும் எண்ணை மாற்றாமல் நிறுவனத்திற்கு மாறக் கூடிய வசதியைக்
கேட்டு 40 லட்சத்து 14 ஆயிரத்து 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுடன் இதுவரை இவ்வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்து 900 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டதாக கர்நாடக மாநிலம் உள்ளது.
இந்த பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில், 26 லட்சத்து 39 ஆயிரத்து 679 விண்ணப்பங்களுடன் உள்ளது.
No comments:
Post a Comment