Oct 19, 2012

சச்சின் டெண்டுல்கரை வரவேற்கிறது பேஸ்புக் உலகம்!



சச்சின் டெண்டுல்கர் உத்தியோகபூர்வமாக பேஸ்புக்கில் இணைந்துள்ளார். Seven3Rockers எனும் குழுவினர் நடத்தும் சச்சின் டெண்டுலரின்
 பேஸ்புக் பக்கத்தின் ஊடாக தனது அனுபவங்களை கிரிக்கெட் ரசிகர்களுடன்
பகிர்ந்து கொள்ள அவர் இணங்கியுள்ளார். அதன் படி நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எனது பேஸ்புக் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இந்தியா அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கனவு என் இளமைக்கால கனவு.  உலக கோப்பை பெற வேண்டும் என்ற கனவை 22 வருடங்களாக துரத்தி சென்றிருக்கிறேன். உங்களது ஆதரவு இன்றி அது நிறைவேற சாத்தியமில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனது அனுபவங்களை தொடர்ந்து இப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள போகிறேன். என்னுடன் இணைந்திருங்கள்' என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தமைக்காக இந்திய அணியை வழிநடத்திய உன்முக்திற்கும் தனிப்பட்ட வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், யுவராஜ் சிங் புற்றுநோயிலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட திரும்பியிருப்பதற்கும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இப்பதிவு எழுதும் வரை (செப்.11) சச்சின் டெண்டுல்கரின் இப்பேஸ்புக் பக்கத்தை 664,000 ற்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நீங்களும் சச்சின் ரசிகரெனில் இதில் இணைந்து கொள்ள : https://www.facebook.com/SachinTendulkar

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயணத்தின் முக்கிய படிக்கற்கள், அவர் அடித்த 100 சதங்களும் எப்போது, எத்தருணத்தில் பெறப்பட்டன போன்ற தகவல்களையும்,  புகைப்படங்களையும் கூட நீங்கள் இதில் காணலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...