- Tuesday, 16 October 2012 12:51
வீடியோ அனோட்டேஷனில் இணையத்தள முகவரிகளை இணைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது யூடியூப்.
இதுவரை யூடியூப் அனோட்டேஷனில் யூடியூப் சேனல் அல்லது வீடியோ போன்றவற்றை மட்டுமே இணைப்பாக வழங்கமுடியும்.
ஆனால் இனி சொந்த இணையத்தளத்தின் இணைப்புக்களை வழங்குவதன்
மூலம் குறிப்பிட்ட வீடியோவொன்று பிரபலமடையும் போது அதிலிருந்து இணையத்தளத்திற்கும் கூடுதல் வருகையாளர்களை ஏற்படுத்தமுடியும் என்பது இணையத்தள உரிமையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
எவ்வாறாயினும் வீடியோ மற்றும் அவற்றில் பயன்படுத்தும் இசை போன்றவற்றின் காப்பிரைட் தொடர்பாக இன்னமும் கடுமையான வரைமுறைகளை வைத்திருக்கின்றது யூடியூப் என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பிரைட் பிரச்சனைகளில் சிக்காமல் தற்போது நல்ல நிலையிலிருக்கும் யூடியூப் சேனல்களுக்கு மட்டுமே வேறு இணையத்தள இணைப்புக்களை வழங்கும் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment