ஜான் கர்டன், ஷின்யா யமனாகா
ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்காக பிரிட்டனைச் சேர்ந்த
ஜான் கர்டனுக்கும், ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனாகாவுக்கும் இந்த
ஆண்டுக்கான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
÷மருத்துவம், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம், வேதியியில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சேவையாற்றும் நிபுணர்களுக்கு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரைச் சேர்ந்த நோபல் பரிசுக் குழு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல்
பரிசை, பரிசுக்குழு திங்கள்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில், "உடலின் முதிர்ச்சியான செல்களை எந்த வகையான செல்களாகவும் மாற்ற முடியும் என்ற கண்டுபிடிப்புக்காக (ஸ்டெம் செல் ஆராய்ச்சி) பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கர்டனுக்கும், ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனாகாவுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. ஸ்டெம் செல் மாற்றத்தின் மூலம் மாற்றுத் திசுக்களை உருவாக்கி பார்கின்சன், நீரிழிவு போன்ற நோய்களைக் குணப்படுத்த முடியுமா? என்று விஞ்ஞானிகள் ஆராய வழி பிறந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்குப் புதிய கருவிகளை வழங்கியுள்ளது. மேலும், மருத்துவத் துறையின் பல பிரிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவும், செல்கள் எவ்வாறு வளர்கின்றன? என்ற நமது புரிதலை மேம்படுத்தவும் உதவியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
÷இந்த ஆண்டில், முதலாவதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, இயற்பியலுக்கான பரிசு செவ்வாய்க்கிழமையும், வேதியியலுக்கான பரிசு புதன்கிழமையும், இலக்கியத்துக்கான பரிசு வியாழக்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இம்மாதம் 15ஆம் தேதி அறிவிக்கப்படும். அனைத்துப் பரிசுகளும் இவற்றை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment