எமது உடலிற்கு கிருமி நாசினியாக தொழிற்படுகிறது மஞ்சள்
|
நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின்
மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ
இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம். மஞ்சளுக்கு பல
மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக
பயன்படுவது.
|
வயிற்றின் உள்ளே உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர்
மஞ்சள்தான். சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை, வேப்பங்
கொழுந்துடன் வாரா வாரம் ஒரு முறை அரைத்துக் கொடுத்தால், வயிற்றில்
பூச்சிகள் இருக்காது.
மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி, இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலால் இரவில் தூங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் உடனே நின்றுவிடும். மஞ்சள் ஜீரணத்துக்கு உதவும் மருந்து கூட. நாம் அன்றாடம் செய்யும் சாம்பார், ரசம் இவைகளில் மஞ்சள் தூளை சேர்த்து விட்டு, அதனுடன் கூடவே பொரித்த சிப்ஸ், வடை, அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும். நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆனால், அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போது, மிளகின் கெட்டத் தன்மையை மஞ்சள் தூள் முறியடித்து விடும். மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய்கூட அண்டாது. இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்று நோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால்தான். விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள். மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய், கீமோதெரபி தரும்போது ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால், முகம் பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது. மஞ்சளில் உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும். அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும். மஞ்சள் ஒரு தடுப்பு மருந்து, வாசனையூட்டி, ஒரு வலி நிவாரணி, ஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள், பயன் பெறுங்கள்! |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment