சீனாவின் தற்போதைய அதிபர் ஹூ ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடைய நிலையில் 59 வயதான ஜி ஜின்பாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதுடன் அதிபராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய அதிபராக்கும் ஜி ஜின்பாங் எப்படி இவற்றை எதிர்கொள்வார்?
என்ற ஆர்வம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பாப் பாடகியை திருமணம் செய்து கொண்டவர் ஜின்பாங். இவரது தந்தை ஜி ஜோங்சுன், மாவோ ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக இருந்தவர். 1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது அதிபராகக் கூடிய நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார்.
நீண்டகாலம் அமெரிக்காவுடன் தொடர்பில் இருப்பவர். இவரது ஆட்சிக்காலத்திலாவது இரும்புத் திரை அகலுமா? என்ற கேள்வியை ஜனநாயகவாதிகள் முன்வைக்கின்றனர்.
















No comments:
Post a Comment