Google Chrome இன் திறனையும் வேகத்தையும் அதிகரிக்க சில வழிகள்..
[Tuesday, 2012-11-27
|
|
1. தொடங்கும் இணையப் பக்கம்
ஒவ்வொரு பிரவுசரும், நாம் விரும்பும் இணையப் பக்கம் ஒன்றை நம் ஹோம் பேஜாக அமைத்திட வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசர் இதற்கும் மேலாக கூடுதல் வசதியினைத் தருகிறது. ஒன்றுக்கும் மேலான இணையப் பக்கங்களை, இணைய உலா தொடங்கும் பக்கங்களாக அமைத்திட வழி தருகிறது. இதற்கு வலது மேல் மூலையில் உள்ள பைப் ரெஞ்ச் ஐகானின் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் 'options' 'basics' ஆகியனவற்றை கிளிக் செய்திடவும். பின்னர் 'open the following pages'என்பதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதில் � add�என்பதில் கிளிக் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் அண்மையில் நீங்கள் பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் பட்டிய லிடப்படும். இவற்றில் நீங்கள் இணையத் தொடர்பினைத் தொடங்கும்போது, இணைப்பு இறக்கி உங்களுக்குக் காட்ட வேண்டிய, இணைய தளத்தின் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை இதில் டைப் செய்திடவும். 2. சர்ச் இஞ்சின் மாற்றுக குரோம் பிரவுசர், கூகுள் மட்டுமின்றி வேறு தேடுதல் சாதனங்களையும், பிரவுசரில் இணைக்க வழி தந்துள்ளது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தேடுதல் சாதனம் குரோம் பிரவுசரில் இல்லாமல் இருக்கலாம். அவற்றில் ஒன்றை இந்த பிரவுசரிலேயே தேடுதல் தளமாக அமைக்க விரும்பினால், வழக்கம்போல பைல் ரென்ச் ஐகானில் கிளிக் செய்திடவும். அதன் பின் 'options'/ 'manage' எனச் செல்லவும். தேடுதல் சாதனத்திற்கான பிரிவைக் காணவும். இங்கு நீங்கள் விரும்பும் தேடுதல் சாதனம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுத்து 'make default' என்ற பட்டனை அழுத்தவும். 3.அவசரத்தில் மூடிய தளம் திறக்க அதிக எண்ணிக்கையில் இணைய தளங்களைத் திறந்து பணியாற்றுகையில், சில வேளை களில் எந்த தளத்திற்கான டேப் எது என்று அறியாமல், அதனை மூடிவிடுவோம். மூடிய பின்னரே, அதற்கான முகவரி நினைவில் இல்லாமல், அல்லது எப்படி அந்த தளத்தினைத் திறந்தோம் என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். இவ்வாறு மூடிய பத்து தளங்களை மீண்டும் பெற குரோம் பிரவுசரில் வழி உள்ளது. Ctrl+shift+T என்ற கீகளை அழுத்தினால், இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் திறக்கப்படும். இப்படியே மீண்டும் மீண்டும் அழுத்த, மூடப்பட்ட பத்து தளங்களைத் திரும்பப் பெறலாம். 4. பிரவுசர் பாரில் டேப் புக்மார்க் பார்கள் மிக வேகமாக நிரம்பப் பெறும். இதனால் தளங்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்படுகையில், சில டேப்கள் நம் பார்வையில் இருந்து மறையும். இணையத்தில் இருக்கும் ஒரு வேளையில், குறிப்பிட்ட சில தளங்களை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டிய திருப்பின், இந்த தள டேப்கள் நம் பார்வையில் இருந்து மறைக்கப்படுவதால், நமக்கு சற்று சிரமம் ஏற்படும். இதற்குத் தீர்வாக குரோம் ஒரு வழி தருகிறது. புக்மார்க் ஒன்றை அட்ரஸ் பாரில் குத்தி (pin)வைக்க இந்த வழி உதவுகிறது. அப்படிக் குத்தி வைத்திடுகையில், ஒரு சிறிய ஐகான், அந்த தளத்தின் பிரதிநிதியாக அட்ரஸ் பாரில் அமர்ந்து கொள்கிறது. இதனைக் கிளிக் செய்து, தளத்தினை எளிதாகப் பெறலாம். இவ்வாறு குத்தி வைத்திட, எந்த தளத்தை இப்படி அமைக்க வேண்டுமோ, அந்த டேப்பின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் 'pin tab' என்று இருப்பதனைக் கிளிக் செய்திடவும். பின்னர் இது வேண்டாம் என்று கருதினால், மீண்டும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் 'unpin' என்பதில் கிளிக் செய்திட, ஒட்டிக் கொண்டிருந்த சிறிய ஐகான் நீக்கப்படுவதனைக் காணலாம். நீங்கள் பிரவுசரை எப்போது மூடுகிறீர் களோ, அப்போது, இவ்வாறு குத்தப்பட்ட அனைத்து தளங்களின் ஐகான்களும் நீக்கப்படும். இந்த செட்டிங்ஸ் அந்த பிரவுசிங் காலத்திற்கு மட்டுமே. 5. குரோம் நினைவகம் குரோம் பிரவுசர் அதன் வேகத்திற்குப் பெயர் பெற்றது. அப்படி இருந்தும் சில வேளைகளில் வேகம் குறைகிறதா? ஒரு டேப் தவிர மீதம் உள்ள அனைத்து டேப்களையும் மூடவும். இதற்கு Ctrl+W R களை அடுத்தடுத்து அழுத்தினால், அவை ஒவ்வொன்றாக மூடப்படும். ஒரு டேப் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை மூடவும். மீண்டும் இவற்றைத் திறக்க Ctrl+Shift+T ஆகிய கீகளை அழுத்தவும். மூடப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும். இதனை அவ்வப்போது செயல்படுத்தினால், குரோம் எடுத்துக் கொள்ளும் மெமரி ரெப்ரெஷ் செய்யப்பட்டு, வேகம் குறையாது. இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. குரோம் தொகுப்பின் டாஸ்க் மானேஜர் செயல்பாட்டினை இயக்கலாம். இதனைப் பெற ஷிப்ட் + எஸ்கேப் (Shift+Esc) கீகளை அழுத்தவும். இப்போது கிடைக்கும் பட்டியலில், திறந்திருக்கும் தளங்களில் எந்த தளம் அதிக மெமரி இடத்தினை எடுத்துக் கொள்கிறது என்று பார்க்கவும். அதனைத் தேர்ந்தெடுத்து, 'end process' என்பதனை அழுத்தி இயக்கத்தினை மூடவும். இன்னும் தெளிவாக குரோம் பிரவுசரின் மெமரி பயன்பாட்டினைப் பார்க்க வேண்டும் என்றால்,டேப் ஒன்றைத் திறந்து 'about: memory' என டைப் செய்திடவும். இப்போது மற்ற பிரவுசர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டி ருந்தால், அவை எடுத்துக் கொள்ளும் மெமரி இடமும் காட்டப்படும். |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment