தற்போது சந்தயில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் 1 டெரா பைட் (Tera Byte) அளவு வரை கிடைக்கிறது. இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகையுண்டு அவை சடா (SATA) மற்றும் ஐடிஈ (IDE). சடா தொழில்நுட்பம் என்பது புதிய முறை இதில் டேட்டா டிரான்ஸ்பர் மிகவும் வேகமாக இறுக்கும்.

ஐடிஈ தொழில்நுட்பம் தகவல் பறிமாற்றத்தில் மிகவும் மெதுவாக இறுக்கும். தகவல் பறிமாற்ற உதவும் கேபிள்களை பஸ்(Bus) என்று அழைப்பர்.சடா பஸ்கள் மிகவும் சிறியதாக இருக்கும் ஆனால் ஐடிஈ பஸ்கள் மிகவும் பெறிதாக பட்டையாகவும் இருக்கும். ஐடிஈகளை படா (PATA)) என்றும் அழைப்பர்.சடா என்பது சீரியல் அடா (Serial ATA) என்பதன் சுருக்கமாகும்,படா என்பது பாரலல்
அடா (Parallel ATA). சடா தொழில்நுட்பதில் 7 விசைகள் (Conductors) மற்றுமே உண்டு ஆனால் படாவில் 40 விசைகள் இருக்கும் ஆக இரண்டு ஜோடி விசைகள் கொண்டு தகவல் பறிமாறபடும் ஆகவே சடாவில் மிகவும் விரைவாக தகவல் பறிமாறமுடியும்.




இங்கு கீழே இருக்கும் படத்தில் சடா மற்றும் படா ஆகிய ஹார்ட் டிஸ்கையும் அதன் அகலங்களையும் காணலாம். சடா எவ்வளவு சிறியதாக இருக்கிறது என்றும் படா எவ்வளவு பெறியதாக இருக்கிறது எண்று பாருங்கள். புதிய தொழில்நுட்பம் எல்லா வேலைகளையும் மிகவும் வேகமாக முடிக்க உதவுகிறது.

No comments:
Post a Comment