Mar 29, 2013

6 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை!

News Service
கசகஸ்தான் நாட்டிலுள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று சோயூஸ் விண்கலம் ஏவப்பட்டது. இதில் ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் வினோக்ரடாவ், அலெக்சாண்டர் மிசுர்கின் மற்றும் நாசாவைச் சேர்ந்த கிரிஸ் கேசிடி ஆகிய மூவரும் பயணம் செய்தனர். இவர்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி சென்றனர். பொதுவாக பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைய குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். ஆனால் இந்தக் குழுவினர் புதிய வழித்தடத்தில் பயணித்து வெறும் 5 மணி நேரம் 45 நிமிடத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.
  
விண்வெளி நிலையத்தை விரைவில் சென்றடையும் வகையில் விமானங்கள் பயணிக்கும் புதிய வழித்தடத்தை கண்டறிவதற்காக ரஷ்ய விஞ்ஞானிகள் கடந்த 3 வருடங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த விரைவு வழித்தடத்தை ஆளில்லா சரக்கு விமானங்களைப் கொண்டு 3 முறை சோதனை செய்துள்ளனர்.இந்த சோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளனர். கடந்த 6 மாதமாக இந்த பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...