Mar 30, 2013

உடல் நலம் தரும் சமையலறை மருந்து


100 grams of coriander seeds, known as coriander, try removing the nerve to the skin up to 100 grams (Chuck always have to use nerve removed) and 1 tsp cardamom powder 100 g varuttu slight amount of treble. As tikaksan daily coffee making, milk or honey mixed in a drink.

தனியா எனப்படும் கொத்துமல்லி விதை 100 கிராம், தோல் சீவி நரம்பு நீக்கிய சுக்கு 100 கிராம் (எப்போதும் சுக்கை நரம்பு நீக்கி உபயோகிக்க வேண்டும்) ஏலக்காய் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து. தினசரி காபி டிகாக்ஷன் போல் தயாரித்து, பால் அல்லது தேனில் கலந்து பருகவும்.

மணத்தக்காளி வற்றல்:

மணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக

இருந்தால் சுண்டைக்காயை வறுத்து,  உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது.

வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல் மிகவும் நல்லது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...