கூகுள்
நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில்
வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது
வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர்
புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு
புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த
2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த
பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர்.
பின்னர்,
பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ்
பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத்
தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது
நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
முதல்
அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம்
பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச்
சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Crankshaft
JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை
மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி
விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை
மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி
செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4
பீட்ட 12) - 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி
செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.
இந்த
பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில்
தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற,
வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச் ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல்
ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை.
அதற்குப்
பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது.
இதனால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம்
கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்கு உள்ளது என்று
உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும்
தரப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக
cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச்
பாக்ஸில் cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து
செட்டிங்குகளும் தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.
இந்த
குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும்
இணைத்துச் செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என
எந்தக் கம்ப்யூட்டரிலும் இவை இணைந்து செயல்படும்.
இதுவரை எக்ஸ்மார்க்ஸ் (Xmarks from www.xmarks.com)
என்னும் ஆட் ஆன் புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும்
பாஸ்வேர்ட்களை அனைத்து வகை இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் இணைத்து
செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போது குரோம்
பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல
கம்ப்யூட்டர் களில் மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி
மிகவும் பயனுள்ளது.
பொதுவாக
கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்த
பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு
மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக்
கெடுக்கின்றன.
இதனை
மனதில் கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் (Sandbox) பாதுகாப்பினை, பிளாஷ்
பிளேயருள்ளாக அமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப்
பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு,
கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது.
விண்டோஸ்
7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும்
என்று காட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள்
தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.
மேலும்
குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால்,
பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு
தீர்வு காணலாம்.
இந்த
பிரவுசர் எச்.264 (ஏ.264) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று
பலர் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும்
பிளாஷ் பிளேயர் ஈடு கொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை.
மேலும்
பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும்
எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரிய பிரச்னையாகத்
தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment