Mar 30, 2013

சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தம்: மரபுகளை தகர்த்தெறிந்த புதிய போப்!



ரோம்: சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டு இதுவரையிலான: மரபுகளை தகர்த்தெறிந்துள்ளார் புதிய போப்பாண்டவரான போப் பிரான்சிஸ்.
உலகம் முழுவதும் இன்று இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் சிலுவையில் அறையப்படும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூறும் புனித வியாழன் வழிபாடு, வாடிகன் நகரத்தில் நேற்று நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி போப் ஆண்டவர் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகளை தகர்த்தெறிந்து,

சிறைக்கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டுள்ளார்.
ரோம் நகரில் உள்ள கசல்டெல் மர்மோ என்ற சிறார்கள் சீர்திருத்த பள்ளி சிறைக்கு சென்ற அவர், அங்கு 12 இளம் சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டார். அவர்களில் 2 முஸ்லிம் சிறுமிகளும் அடங்குவர். இதுவரை போப் ஆண்டவர் பெண்களின் கால்களை கழுவி முத்தமிட்டது இல்லை. அந்த மரபையும் உடைத்துள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," எனது மனசாட்சிபடி மதகுருவின் கடமையை நான் செய்தேன். நான் உங்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன்.கடவுள் எனக்கு கற்றுக் கொடுத்ததை அன்புடன் செய்கிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...