ஆர்த்ரோஸ்கோபி எப்படி பரிசோதிக்கிறது என்பதை விளக்கவும்.
மூட்டில் ஏற்படும் பிரச்னைகள் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின் மருத்துவரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டுகாயங்களுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் கிளமெண்ட் ஜோசப் பதிலளிக்கிறார்.
ஆர்த்ரோஸ்கோபி என்பது மூட்டு உள்நோக்கு சிகிச்சை ஆகும். இது நுண்துளை அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. அதாவது நுண்துளை வழியாக மூட்டினுள் ஒளியை பாய்ச்சி சிறிய லென்சு மூலம் மூட்டினுள் உள்ள பிரச்னைகளை துல்லியமாக வெளியிலுள்ள திரையில் பார்த்து சிறிய அளவிலான நவீன கருவிகளை வைத்து சிகிச்சை செய்யப்படுகிறது. மூட்டை திறக்காமல் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் விரைவிலேயே குணமடைந்து அவரவர் வேலைக்கோ அல்லது விளையாடவோ செல்லலாம். இந்த சிகிச்சையின் மூலமாக தோள் மூட்டு, முழங்கால் மூட்டு, மணிக்கட்டு மற்றும் கணுக்கால் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
எனது இடது உள்ளங்கைக்கு கீழ் நாடி பார்க்குமிடத்திற்கு மேல் வலது புறத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏதோ துருத்தி கொண்டு உள்ளது. அது எலும்பா, எலும்பு மூட்டா, வலியில்லை. நான் லேப்டாப் பயன்படுத்துகிறேன். அதனால் ஏற்பட்டிருக்குமா?
கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஆர்.எஸ்.ஐ.எனப்படும் பிரச்னை வருவதுண்டு. அதாவது கை விரல், மணிக்கட்டு, கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் தொடர்ந்து வலி ஏற்படும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். எனவே அதை தவிர்ப்பதற்கு சரியான கோணத்தில் அமர்ந்து கணினியை உபயோகிக்க வேண்டும். அது தவிர அதற்கு தகுந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு கை மணிக்கட்டில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டால் தான் கண்டுபிடிக்க முடியும். எனவே உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
நான் ஒரு விபத்தில் கீழே விழுந்து கால் மூட்டில் அடிபட்டது. தசை நார் கிழிந்திருக்கும் என்றார்கள். அதன் அறிகுறிகள் என்ன? தசை நார் கிழிந்திருப்பதை உறுதி செய்வது எப்படி?
முழங்கால் மூட்டு தசைநார் கிழிந்திருந்தால் அடிக்கடி மூட்டு விலகும். கால் ஊன்றும்போது மூட்டு பிறழும். காலை நேராக ஊன்ற முடியாது மற்றும் மூட்டுவலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். தசைநார் கிழிந்திருப்பதை எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பிறகு ஆர்த்ரோஸ்கோபி மூலம் சிகிச்சையின்போதும் தெரிந்து கொள்ளலாம்.
யூரிக் ஆசிட் உள்ள உணவுகள் மூட்டு வலிக்கு காரணமாக கூறப்படுகிறது. அது உண்மையா? உண்மையானால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவையெவை?
சில சமயங்களில் அதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அதாவது சில சமயங்களில் யூரிக் அமிலமானது அதிகமாகும்போது அனைத்து மூட்டிலும் படிந்து மூட்டை பாதிக்கிறது. அதை தவிர்க்க அசைவ உணவு, புரத சத்து மிகுந்த உணவு வகைகள்,ஆல்கஹால் மற்றும் உலர் கொட்டை வகைகளை சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சம்மணம் போட்டு அமர்வதால் கால் மணி மூட்டுக்கு பிரச்னை ஏற்படுமா? எவ்வளவு நேரம் அமர்ந்தால் பிரச்னையில்லை?
சம்மணம் போட்டு அமர்வதால் கால் மணி மூட்டுக்கு பிரச்னை வராது. மாறாக கால்மணி மூட்டுக்கு வெளியே உள்ள தோல் கருப்பு நிறமாகவும் காய்ப்பு காய்த்ததை போல தடிமனாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் ஏற்கனவே பிரச்னை ஏதேனுமிருந்தால் அதனால் பாதிப்பு வரலாம்.
மூட்டு வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி, யோகா, சூரியநமஸ்காரம் செய்யலாமா?
மூட்டு வலி உள்ளவர்கள் தரையிலமர்ந்து யோகா செய்வதையும், குத்துக்கால் போடுவதையும் தவிர்த்தல் நல்லது. ஏனென்றால் இதன் காரணமாக மூட்டு தேய்மானம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

No comments:
Post a Comment