Apr 2, 2013

கறிக்கடைக்காரர் பயன்படுத்திய விண் கல்


பூமியில் மோதிய விண் கல் எச்சங்கள் ஒரு சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பூமியில் மோதிய விண் கல் எச்சங்கள் ஒரு சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினில் பன்றிகள் வளர்த்துவந்த பண்ணைக்காரர் ஒருவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பன்றி இறைச்சியைப் பதனிடுவதற்கு பயன்படுத்தி வந்த 100 கிலோ எடைகொண்ட உலோகப் பாறை ஒன்று விண் கல் ஒன்றின் எச்சம் என்று தெரியவந்துள்ளது.
53 லட்சம் அமெரிக்க டாலர்கள் விலைபோகக்கூடிய உலோகப் பாறை இது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஃபாஸ்டினோ அஸென்ஸியோ லொபெஸ் என்ற இந்த நபர் 1980ஆம் ஆண்டு இந்த உலோகப் பாறையை கண்டெடுத்திருந்தார்.
அது முதல் பன்றிக் கறி மீது பளு ஏற்றி பதனிடுவதற்கு அவர் இதனைப் பயன்படுத்தி வந்தார்.
ஸ்பெயினில் தரையில் விண் கல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட டிவி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த பின்னர், நிலவியல் நிபுணரான யுவான் கார்லோஸ் என்பவரைத் தொடர்புகொண்டு தன்னிடம் உள்ள பாறை பற்றி ஃபாஸ்டினோ குறிப்பிட்டுள்ளார்.
அதன் இந்தப் உலோகப் பாறையை ஆராய்ந்ததில் இது லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண் கல்லின் எச்சம் என்று தெரியவந்துள்ளது.
ஸ்பெயினில் இவ்வகையில் கண்டெடுக்கப்பட்ட நான்காவது விண் கல் எச்சம் இது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஃபாஸ்டினோ பயன்படுத்திவந்த உலோகப் பாறை தற்போது அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...