சீப்ரா மீன் எனப்படும் ஒரு வகை மீனின் உயிர் மரபணுக்கள் மனிதன் கண் விழித்திரையில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் சக்தி படைத்தவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த மீனில் இருந்து பெறப்படும் Stem cells எனப்படும் மரபணுக்கள் Retinas என அழைக்கப்படும் விழித்திரையில் பழுது படும் ஒளிக் கூம்புகளை (Cones) மறுபடி உற்பத்தி செய்வதன் மூலம் இழந்த பார்வைத் திறனை மீள வழங்கும் ஆற்றலுடையன எனக் கூறப்படுகின்றது.
நமது விழித்திரையில் காணப்படும் தண்டுகள் (Rods) மற்றும் ஒளிக் கூம்புகள் (Cones) என்பவையே படங்களைக் கிரகிக்கும் ஆற்றலுடைய Photoreceptors ஆகும்.
மனிதனின் கண்களில் Rods இரவில் பார்வைத் திறனையும், cones பகல் நேரத்தில் அனைத்து நிறங்களையும் உணரச் செய்யும் தன்மையையும் அளிக்கின்றன.
இது குறித்து அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டெட் அல்லிசன் கூறுகையில், நமது விழித்திரையில் உள்ள ஒளிக் கூம்புகளை (Cones) மட்டுமே Zebra மீனின் மரபணுக்கள் திரும்ப வழங்கக் கூடியன.
இதுவரை கிடைக்கபெற்ற மருந்துகள் யாவும் தண்டுகளை (Rods) மட்டுமே குணப்படுத்தும் தன்மையுடையன எனவும் தெரிவித்தார்.
மனிதனின் கண்ணுக்கு மிகவும் உபயோகமான ஒரு மருந்து முதல் தடவையாக ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதன் அடுத்த கட்டமாக இந்த சீப்ரா மீனில் பழுதான ஒளிக்கூம்புகளைத் திருத்தும் குறிப்பிட்ட ஜீனை (Gene) அடையாளம் காண்பதே எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment