முடி
உதிர்தல் என்பது உலகளாவிய பிரச்சனை ஆகும். அதற்கு உணவுப் பழக்கம்,
ஊட்டச்சத்து குறைபாடு, பலவித மருந்துகளை உண்ணுதல், மன அழுத்தம், சுகாதார
சீர்கேடு மற்றும் மரபியல் போன்ற பல காரணங்கள் உள்ளன.
தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிவதாலும், ஆண்களுக்கு முடி உதிரும். இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய முடி உதிர்தலை குறைக்க, எளிய 20 தீர்வுகள் இதோ…
01. சீரான இடைவெளியில் தலைமுடியை கழுவுதல்
சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும் தலைச் சருமமும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி உதிர்தல் குறையும். இது தொற்று மற்றும் பொடுகு பிரச்சனைகளில் இருந்தும் தலையை காப்பாற்றுவதால், முடி உடைதலும், உதிர்தலும் கணிசமான அளவு குறையும். இது போக சுத்தமான தலைமுடி தோற்றத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.
02. முடியை ஆரோக்கியமாக பேண தேவைப்படும் வைட்டமின்களை எடுத்துக்கொள்ளல்
வைட்டமின்கள் உடல்நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் ஏ தலையில் உள்ள மயிரடிச்சுரப்பு வளமாக
சுரக்க உதவி புரியும். வைட்டமின் ஈ, தலைச் சருமத்திற்கு அடியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவும். வைட்டமின் பி, முடியின் நிறத்தை பேணுவதற்கு பயன்படும்.
03. புரதச் சத்துள்ள உணவுகள்
கொழுப்பில்லா இறைச்சி, மீன்கள் மற்றும் இதர புரதச்சத்துள்ள உணவுகளை உண்ணுவதால் முடி உதிர்தல் குறையும்.
04. சிலவகை எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்தல்
பல காலமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், தலைக்கு முக்கிய எண்ணெய்களை கொண்டு சில நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இது மயிர்ச்சுரப்பிகளை சுறுசுறுப்பாக இருக்க உதவும். அதிலும் பாதாம் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்.
05. ஈர முடியை சீவுவதை தவிர்க்கவும்
முடி ஈரத்துடன் இருக்கும் போது, வலுவிழந்த நிலையில் இருக்கும். அதனால் ஈர முடியை சீவ முயற்சித்தால் முடி கழிதலுக்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் ஈரத்துடன் இருக்கும் போதே முடியை சீவ வேண்டுமானால், அகன்ற பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தவும். அதே போல் முடியை அடிக்கடி சீவுவதையும் நிறுத்த வேண்டும். இது முடியை சேதப்படுத்தி கொட்டவும் செய்யும். முடிந்த வரை முடியில் ஏற்படும் சிக்கல்களை கைகளைக் கொண்டே எடுங்கள்.
06. பூண்டுச்சாறு, வெங்காயச்சாறு அல்லது இஞ்சிச்சாறு
மேற்கூறிய சாறுகளில் ஏதாவது ஒன்றை தலைச் சருமத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பின் காலையில், முடியை நன்கு அலசுங்கள். இதை வாரம் முழுவதும் தொடர்ந்து செய்தால், நல்ல பலனை காணலாம்.
07. அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்
தலைமுடி தண்டில் நான்கில் ஒரு பகுதி தண்ணீர் உள்ளது. அதனால் தினமும் 4-8 கப் தண்ணீர் பருக வேண்டும். இது வளமான முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
08. க்ரீன் டீயை தலையில் தடவவும்
க்ரீன் டீயை தலையில் தடவினால், முடி கொட்டுதலை தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இரண்டு க்ரீன் டீ பைகளை எடுத்து, ஒரு கப் தண்ணீரில் ஊற விட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை தலையில் நன்கு தடவி, ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். நல்ல பலனைக் காண, இதனை ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.
09. தலைமுடியை துவாய் கொண்டு துவட்டுவதை தவிர்க்கவும்
முடியை துண்டை வைத்து துவட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதில் முடியை இயற்கையாகவே காய விட வேண்டும்.
10. குடிப்பழக்கத்தை கைவிடவேண்டும்
முடி கொட்டுவதை உணர்ந்தீர்கள் என்றால், மது பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மது, முடி வளர்ச்சிக்கு தடை போடும். அதனால் குடி பழக்கத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, தலை முடி வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.
11. புகைப்பிடித்தலை தவிர்க்கவும்
புகைப்பிடித்தால், தலைச் சருமத்திற்கு செல்லும் இரத்த அளவு குறையும். இது முடி வளர்ச்சிக்கு தடையாக நிற்கும்.
12. உடற்பயிற்சியில் ஈடுபடவும்
தினமும் ஏதாவது ஒரு உடற்பயிர்சியில் ஈடுபட வேண்டும். நடை, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை தினமும் 30 நிமிடங்கள் செய்தால், அது உடலில் ஹார்மோன் அளவை சீராக்கி முடி கொட்டுதலையும் குறைக்கும்.
13. மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
மன அழுத்தத்திற்கும், முடி கொட்டுதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என்று மருத்துவ சான்றுகளோடு பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தை வளர விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தியானம் கைக்கொடுக்கிறது.
14. ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
முடியை கருவிகள் மூலம் அடிக்கடி உலர்த்தவோ அல்லது சூடாக்கவோ முயற்சிக்க கூடாது. அடிக்கடி அப்படிச் செய்தால், முடியில் உள்ள புரதச்சத்து வலுவிழந்து போகும். முடியின் சத்தும் குறைந்து, முடி கழிதலுக்கு வழிவகுக்கும்.
15. தலை வியர்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும்
எண்ணெய் பசையுடன் கூடிய முடியை கொண்ட ஆண்களுக்கு, கோடைக்காலத்தில் வியர்வை உண்டாவதால் பொடுகு அதிகரிக்கும். இதுவே முடி கொட்டவும் காரணமாக அமையும். கற்றாழை மற்றும் வேப்ப இலைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஷாம்புவை பயன்படுத்தினால், தலை குளிர்ச்சியோடு இருப்பதோடு, பொடுகிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
16. ஹெல்மெட் அணியும் போது தலையை சுற்றி ஸ்கார்ப் கட்டவும்
கோடைக்காலத்தில் ஹெல்மெட் அணியும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் அணிவதால், வியர்வையானது தலையில் உள்ள துளைகள் வழியாக உள்ளிறங்கும். அதனால் முடியின் வேர்கள் வலுவிழக்கச் செய்து, முடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே தலையை சுற்றி ஸ்கார்பை கட்டிக் கொண்டால் முடி உதிர்வு குறையும்.
17. தலை முடியின் ஸ்டைலை மாற்றவும் (ஆண்கள் நீளமான முடியை வளர்க்கலாம்)
முடி கழிகிறதா,முடியை தளர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் போனி டைல், பின்னல் போன்ற ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்கி முடியை உதிரச் செய்து சீக்கிரமே வழுக்கையும் விழச் செய்யும்.
18. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளவும்
உடல்நல கோளாறுகள் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். தீராத நோய், கடும் காய்ச்சல் மற்றும் தொற்று போன்றவைகளை ஒழுங்காக கவனித்தால், ஆரோக்கியமான முடியை பாதுகாக்கலாம்.
19. மருந்து உண்ணுதலில் கவனம் தேவை
சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். அதில் ஒன்று தான் முடி உதிர்வு. ஆகவே எப்போதும் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு, பக்க விளைவுக்களை பற்றி அறிந்து கொண்டு, பின் மருந்துகளை வாங்கவும். அப்படி முடியை பாதிக்கும் படி பக்க விளைவு ஏற்பட்டால், மருத்துவரை வேறு மருந்துகளை மாற்றி தரச் சொல்லவும்.
20. ரசாயனங்களை விட்டு தள்ளியே இருக்கவும்
கடுமையான ரசாயனங்கள் மற்றும் நிரந்தர முடிச் சாயங்கள், முடியின் ஆரோக்கியத்தை பாதித்து விடும். முடி கொட்டும் போது தலை முடிக்கு சாயம் பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment