தற்போது முகப்பரு தொல்லைகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதற்கு
எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை.
எனவே பலர் இத்தகைய பருக்களை போக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட,
இயற்கை முறைகளையே நாடுகின்றனர்.
அத்தகையவர்களுக்காக சிறப்பான தோற்றம் அளிக்கும் சருமத்தைப் பெற இந்த
கட்டுரை வழிகாட்டும். ஆகவே எதிர்பார்த்து வரும் பளிங்கு போன்ற முகத்தோற்றம்
பெற பின்வரும் வழிகளை கடைப்பிடித்து வாருங்கள்.
how get clean acne free face
வழிகள்:
1. சாலிசிலிக் அமிலம் அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
இதனால் இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும்.
2. ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை
நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும்.
3. க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்தாலும் முகம் சிவத்தலையும், தோல்
உடைதலையும் தவிர்க்கலாம்.
4. வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போன்று உபயோகித்தால், அது
முகத்தை மேம்படுத்தி முழு நிறைவாக்கும். அதிலும் அறை வெப்பநிலையில் காய
விடுங்கள். காற்றாடிக்கு முன் நின்று காய வைத்தால் அது எந்தப் பயனையும்
தராது. காய்ந்த பிறகு அதை உரித்து எடுத்து, தண்ணீர் கொண்டு கழுவி எடுக்க
வேண்டும். முகப்பருவின் மீது பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தாலும்,
முகப்பருவின் அளவை அது குறைக்கும்.
5. காட்டன் சிறிது எடுத்துக் கொண்டு, பெராக்சைடில் நனைத்து முகப்பருவின்
மீது தடவுங்கள். இது எரிச்சலை தரலாம், ஆனால் நல்ல மாற்றத்தை தரும்.
விருப்பபட்டால் ஆல்கஹாலை கூட இவ்வாறு பயன்படுத்தலாம். ஆனால் அது அதிக
எரிச்சல் தரும் என்று பரவலாக கூறப்படுகிறது.
6. ஸ்ட்ரிடெக்ஸ் (Stridex) எனப்படும் துடைப்பான்களை உபயோகப்படுத்தலாம். இது
சாலிசிலிக் அமிலம் மற்றும் பிற நல்ல வினைப் பொருட்களுடன் கூடிய
வட்டவடிவிலான பஞ்சு. இதில் ஆல்கஹால் அற்ற வகைகளும் கிடைக்கின்றன. இது
எரிச்சலை தராதது. ஒவ்வொரு நாள் இரவும் இதை முகத்தின் மீது காயும் வரை
வைக்கவும். இது முகத்தை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும்,
முகத்திற்கு சிறந்த முறையில் உதவும். ஆரம்பத்தில் இது முகத்தில் வறட்சியை
ஏற்படுத்தலாம். தொடர்ந்து உபயோகிக்க சருமம் இதற்கு பழக்கப்பட்டுவிடும்.
குறிப்புகள்:
- முகத்தை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுங்கள்.
- சமச்சீரான உணவு உட்கொள்வது மாசற்ற சருமத்தை பேண உதவும்.
- மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அது முகப்பருவை உண்டாக்கலாம்.
எச்சரிக்கை:
* அனைத்து முறைகளையும் ஒரே நாளில் செய்யக்கூடாது. வாரம் ஒருமுறையோ அல்லது
சில தினங்களுக்கு ஒருமுறையோ செய்ய வேண்டும்.
* ஒரே நாளில் முகப்பரு மறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு சில
காலம் பிடிக்கும்.
* கையைக் கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்.
* பருவை கிள்ளிவிடவோ, உடைக்கவோ முயல வேண்டாம். அது ஆறாத வடுவாய் அமைய
நேரிடும்.
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment