-
பிலிப்பின்ஸ் மத்திய பகுதியில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட பலமான நிலநடுக்கத்தில் 85 பேர் உயிரிழந்தனர். காலை 8:12 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானது.நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் மத்திய பிலிப்பின்ஸில் பல இடங்களில் அடுக்குமாடி கட்டடங்களும், வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்களும் இடிந்தன. மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர்.
15 முதல் 20 வினாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. பல இடங்களில் சாலைகளில் பலத்த விரிசல் ஏற்பட்டது. பாலங்களும் இடிந்து விழுந்தன.
போகால் அருகே உள்ள மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த செபு நகரத்திலும் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. மீன்பிடித் துறைமுகம் மற்றும் சந்தை பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர்.
போகாலில் 69 பேரும், செபுவில் 16 பேரும் உயிரிழந்தனர். இவர்களில் மூன்று பேர் செபு நகரத்தில் அரசு உதவித் தொகை பெறுவதற்காக நின்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செபு நகரத்துக்கு அருகில் உள்ள மற்றொரு நகரத்தில் இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்ததில் 18 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போகால் மாகாண பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரேனும் உயிரிழந்தார்களா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. செபு நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மருத்துவமனை கட்டடம் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் அவர்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்நகர மேயரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் குறித்து பெண் ஒருவர் கூறியது:
நில நடுக்கம் ஏற்பட்டவுடன் அதிர்ச்சியில் தெருவிற்கு ஓடினேன். அங்கு காயமடைந்திருந்த பலரை கண்டேன். அப்போது, தங்களது தேவாலயம் இடிந்து விட்டதாக சிலர் தெரிவித்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி பேரழிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்றார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் அதிக அளவிலான உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசிபிக் கடல் பகுதியையொட்டி அமைந்துள்ள பிலிப்பின்ஸில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும், நிலநடுக்கமும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மத்திய பிலிப்பின்ஸில் உள்ள நெகராஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment