Feb 12, 2014

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தியானுக்கு அழகாக அமைக்கப்படவுள்ள ஏழுதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு வைபவத்தின் முழுமையான வீடியோப்பதிவு!



1620539_10202102396179603_1312105875_n

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகப் பெருமானுக்கு-அழகுற அமைக்கப்படவுள்ள-ஏழுதள இராஜகோபுரத்திற்கான   அடிக்கல் நாட்டும் வைபவம் 22-01-2014 புதன்கிழமை காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது நீங்கள் அறிந்ததே!
வடமாகாணத்தில் பிரபலமான  ஸ்தபதி சிற்பக சிந்தாமணி  அராலி நவரட்ணம் கங்கைரூபன் (ஆலய கட்டிட சுதை,கருங்கல் சிற்ப வர்ண ஒப்பந்தக்காரர்)அவர்களினால்  21 மாத கால ஒப்பந்த அடிப்படையில்
வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு ஏழுதள இராஜகோபுரம் மிக விரைவாக கட்டி முடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21-01-2014 புதன்கிழமை அன்று காலை நடைபெற்ற-அடிக்கல் நாட்டும் வைபவத்தில்-சமயப் பெரியோர்கள்-சமூக ஆர்வலர்கள்-ஆலயநிர்வாகத்தினர்-வேலணை பிரதேச செயலர்-வேலணை பிரதேசசபை தவிசாளர்-பாடசாலை மாணவர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-காணொளியினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
kopuram2

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...