Oct 12, 2014

விஷத்தை விரட்டி அடிக்கும் அருகம்புல் !

அருகம்புல் ஜூஸ்

Arukampul juice
புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
பொதுவாக செயற்கை பானங்களை உட்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு, இயற்கையின் வரப்பிரசாதங்கள் பற்றியும், அதன் மகத்துவங்கள் பற்றியும் தெரியாமல் உள்ளது.
இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளின் மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம், கற்றாழை, வேப்பிலை மற்றும் துளசி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் அருகம்புல் என்பது விநாயக இறைவனுக்கு செலுத்துவது மட்டுமல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்.


[ 01 ] அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.

[ 02 ] சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இந்த வேர் மிகவும் சிறந்ததாகும்.
[ 03 ] உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் அரும்புல் ஒரு சிறந்த மருந்தாகம்
[ 04 ] ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் அருகம்புல் ஜூஸ் திறமையானது.
[ 05 ] அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.
[ 06 ] தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல் ஜூஸ் தயாரிப்பதற்கு இளம்புல்லாக பார்த்து வாங்குவது அவசியம். இளம்புல்லை நன்றாகக் கழுவ வெறுமனே அரைத்து அப்படியே குடிக்கலாம். ருசியாக இருக்க வேண்டுமென்றால், அரைமூடி எலுமிச்சைச்சாறு கலக்கலாம்.
சுவையாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், அருகம்புல்- அரை கப், மிளகு- 2, சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- அரை டீஸ்பூன், சர்க்கரை- அரை டீஸ் பூன், எலுமிச்சைச்சாறு- அரை கப் ஆகியவற்றைக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...