கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம். இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சியை பயன்படுகிறது. கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.
கிவி பழமானது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம். விட்டமின் ‘சி’ யை அதிக அளவில் கொண்டுள்ள கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது.
முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மாரடைப்பிற்கு முன்னர் ஏற்படக்கூடிய நோய்களில் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்த சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் சீராக செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ பழத்திற்கு உண்டு. வளரும் இளம் குழந்தைகளுக்கு கிவி பழத்தை சாப்பிடக்கொடுத்தால் மூளை நன்கு வளர்ச்சியடையும்.
‘ஃபோலேட்(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் கிவி பழத்தில் உள்ளது. இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த பழமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment