நாவல்பழம்
நாவல்
பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளுக்கோசைட் உள்ளது.இதன் செயல்பாடு
மூலம் உடலுக்குள் ஸ்டார்ச்சைசர்க்கரையாக மாற்றும் செயல்பாடு
தடுக்கப்படுகிறது.இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரழிவு நோய்
கட்டுப்பாட்டில் இருக்கும்.தினமும் நாவல் பழ விதையை காயவைத்து பொடி செய்து
தயிரில்கலக்கி இருவேலை குடித்தால் சிறுநீரிலும்,ரத்ததிலும் இருக்கும்
குளுகோஸ் பெருமளவு குறையும் என்கிறார்கள் ல்க்னோவில் உள்ள நீரழிவு
ஆராய்ச்சி மையத்தில்.
பேரீச்சம்பழம்
இயற்கையின்
கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை
காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம்
கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில்
பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.இது மிகவும் சத்துள்ள பழமாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது
ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது. வெப்பம்
அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப
வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு
நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள்
எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.அரபு மக்களின்
உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.ஆயுர்வேத, யுனானி,
சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய
சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த
பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5
மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான்
கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த
மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை
தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா
சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள்
நீங்கும்.பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி
ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து
காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும்
ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான
சத்துக்கள் கிடைக்கும்.அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி
இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத்
தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம்
பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத்
தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.பேரீச்சம்
பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து
சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.*
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.* எலும்புகளை
பலப்படுத்தும்.* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.* முதியோருக்கு ஏற்ற
மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான
இன்னல்களைக் குறைக்கும்.* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.* பேரீச்சம்
பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.மாலை
நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய்
என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச்
செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச்
சிறந்தது.
அன்னாசிப்பழம்
அன்னாசி
என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இது பிரேசில் நாட்டின்
தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.மஞ்சல் காமாலையை
விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு. இரத்தமிழந்து
பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி மிகசிறந்த மருந்து. பித்த சம்பந்தமான
கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவற்றை
நீக்குவதில் அன்னாசி சூரன். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக
அன்னாசி உதவும். ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி கண், காது, பல்,
தொண்டை சம்பந்தமான அனைத்து நோய்களையும். வாய்ப்புண், மூலைக்கோளாறு, ஞாபக
சக்தி குறைவு போன்றவை தேனும் அன்னாசிப்ழமும் சேர்த்து செய்யப்படும்
அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில்
குணம் தெரியும்.
அன்னாசிப்பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் எனபது மூட நம்பிக்கை, மாம்பழம், ஆரஞ்சு பழங்களில் உள்ள அதே 14 கலோரி தான் அன்னாசியிலும் உள்ளது இது நாம் தினமும் பயன்படுத்தும் புலியின் அளவான 82 கலோரியைவிட மிகக்குறைவு. இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.
அன்னாசிப்பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் எனபது மூட நம்பிக்கை, மாம்பழம், ஆரஞ்சு பழங்களில் உள்ள அதே 14 கலோரி தான் அன்னாசியிலும் உள்ளது இது நாம் தினமும் பயன்படுத்தும் புலியின் அளவான 82 கலோரியைவிட மிகக்குறைவு. இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.
நெல்லிக்காய்
நெல்லி
(Emblica offinalis அல்லது Phyllanthus emblica) யுபோர்பியேசி
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்
வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது.
மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக்
குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு
வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர
நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான
தலைமயிரைத் தரும்.காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே
பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள்
இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து
இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும்,
கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின்
எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள்
ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும்.
இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும்.
கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும்.
உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று
கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3
வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம்.
நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்
படுகிறது.
No comments:
Post a Comment