Oct 26, 2014


காரட்

கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும்.வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.இந்த துர்நாற்றத்திற்கு வாயோ, பற்களோ காரணம் அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை நீங்களும் அடிக்கடி வாங்கி சமைத்துப் பாருங்களேன்.
கரட் சமையலில் பயன்படும் கிழங்கு வகையாகும். ஈராண்டுத் தாவரமான கரட்டின் கிழங்குகள் வழக்கமாக செம்மஞ்சள், வெள்ளை அல்லது சிவப்பு-வெள்ளை கலந்த நிறங்களில் காணப்படும். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக் காட்டுக் கரட்டிலிருந்தே கரட் தோன்றியது. கரட்டை பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம். கரட் சாறு சத்துள்ள பானமாகும். கரட்டில் விற்றமின் ஏ நிறைந்துள்ளது.

கத்தரிக்காய்


கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரி நைற்சேட் குடும்பத்தைச் சேர்ந்தது. தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயகப் பிரதேசங்களாகும். இது 40 முதல் 150 ச.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, மத்தியகாலத்தில் அராபியர்களால் மத்தியதரைக்கடர்ற் பகுதியில் அறிமுகமானது. இக்காயை தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ மசித்தோ உண்பார்கள்.

\கத்தரிக்காய் சமஸ்கிருத மொழியில் வட்டிங்கானா என்றழைக்கப்பட்டதிலிருந்து ஆங்கில மொழியில் ஓபர்ஜின் என்றும், அரபிக் மொழியில் அல்பகின்ஜன் என்றும், பேசியனில் படின்ஜன் என்றும், இத்தாலியில் மெலன்சானா என்றும் பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இது கிறிஸ்துக்கு முன்பு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் இதை Eggplant என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது ஜரோப்பிய நாடுகளிலும் உற்பத்தியாக்கப்படுகின்றது. இது மரக்கறியாகப் பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது ஒரு பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது

நிலா


ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல் காலிங்ஸ் க்கும் வயது 78. ஆல்ட்ரின் வயது 79 !
உலகையே வியப்புக்கும், சிலிர்ப்புக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய இந்த “கிரேட்டஸ்ட் வாக்” என அழைக்கப்படும் மனிதனின் முதல் நிலவு நடை உணர்ச்சி பூர்வமாக திரும்பிப் பார்க்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1969 ல் இளைஞர்களாக பூமிக்கு வெளியே போய் நிலவைப் பார்த்து வந்தவர்கள் இப்போது முதுமைக்காலத்தில் சந்தித்து தங்கள் இறந்த காலத்தின் பறந்த நினைவுகளைப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்தார்கள்.நிலா, நிலவு, அம்புலி, சந்திரன் என்று் பலவாறு கூறப்படும் இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றி வருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். குழந்தைகளாக இருக்கையிலே தாய் நிலாவைக்காட்டி 'நிலா நிலா இங்கே வா' என்று சொல்லி சோறூட்டுதல் பெருவழக்கு.
இந்த நிலாதான் பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள் இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ. துணைக்கோள் என்று கண்டு இருக்கிறார்கள்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...