நான் கடந்த 10.11.2011அன்று காலை ஏழே கால் மணி அளவில் செய்தித்தாள்கள் படித்து கொண்டிருந்தேன். இடது தோளில் வலி இருந்து முன் கை வரை பரவியது. உடல் முழுக்க வேர்த்த்து. உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனை சென்று ஊசி போட்டு இ.சி.ஜி. எடுத்தோம். அந்த மருத்துவர் உடனடியாக இருதய மருத்துவ மனைக்கு செல்ல சொன்னார். நாங்கள் எங்களது குடும்ப மருத்துவரும் இருதய மருத்துவருமான டாக்டர் திரு கே.காமராஜ். எம்.டி. சிவகாசி அவர்களை பார்க்க சென்றோம். காலை ஒன்பதே கால் மணிக்கு சிவகாசி சென்று விட்டோம். (அந்த இரண்டு மணி நேரங்கள் – Golden Hours). அவரது சிகிச்சையால் என்னை பிழைக்க வைத்து விட்டார். நான் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.
திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை இதை தான் பெரிதும் விளக்குகிறது. திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும், மனமார்ந்த வாழ்த்துகளும். அவரது சேவை பெரிதும் பெருகட்டும். வணக்கம் - இந்த ஒர் நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆம் மாரடைப்பு எனும் ஒரு கொடிய நோய் முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாக இருந்து, இப்போது ஏழை பணக்காரன், ஜாதி, மதம், சின்னவர்,
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா