Sep 21, 2012

சிறுநீரில் இரத்தம் போவதற்கான காரணங்கள் என்ன?

பொதுவாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் (Red Blood Cells)  வெளியே வருவதில்லை.  இவை சிறுநீரகங்களின் வடிகட்டியில் தடுக்கப்பட்டு விடுகின்றன. சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்து வேண்டுமானாலும் வரலாம்.
    
கீழ்கண்ட சில காரணங்கள்

சிறுநீரகங்களின் வடிகட்டிகளில் அழற்சி (சிறுநீரக நுண்தமனி அழற்சி Glomerulonephritis)
சிறுநீரகங்களில் நீர்க் கட்டிகள் (Cysts in Kidney)
சிறுநீரகங்களில் சாதாரண கட்டிகள், புற்று நோய்க் கட்டிகள் (Benign and Cancerous tumours in Kidney)
சிறுநீரகங்களில் கற்கள் (Kidney Stones)
சிறுநீரகங்களில் கிருமித் தாக்கம் (Kidney Infections)
சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில பரம்பரை  வியாதிகள் (Inherited disorders of Kidney)
உள்சிறுநீர்க் குழாய்களில் கற்கள், கட்டிகள், கிருமி பாதிப்புகள்
(Stones, tumours, infections of Ureters)
சிறுநீர்ப்பையில் கற்கள், கட்டிகள், கிருமித் தாக்கம் (Stones, tumours, infections of Bladder)
ப்ராஸ்டேட் சுரப்பியில் கட்டி, கிருமி, கல் (Swelling, Infection and stone in Prostate Gland)
அபூர்வமாக இரத்த உறைவில் குறைபாட்டு நோய்களாலும், இரத்த உறைவை தடுக்கும் சில மருந்துகளாலும் (உதாரணம்-சில இதய நோய்களுக்கு தரப்படும் வார்பாரின்- Warfarin)  வரலாம்.

இன்று ஒரு தகவல் - விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள் -

-னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினால் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனிதர்களாகிய நாம் பின்தங்கி இருப்பதாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.


ண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றியே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திரங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய மனிதர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

  ஒரு காலத்தில் கடிகாரம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்த மனிதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேரத்தை அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமரில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும். புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரியனின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள்.இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.
ன்று கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக என்பதை மறந்து அதை ஒரு அழுகுப் பொருளாகவே மாற்றி அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டன. காலையில் உதிக்கும் சூரியனின் ஒவ்வொரு அசைவிலும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தங்களின் தினசரி வேலைகளை செய்துவந்த மனிதர்கள். இன்று ஆயிரம் அதிநவீன வசதிகள் இருந்தும் தங்களின் நேரங்களை சரியாக பயன்படுத்த மறந்து தடுமாறும் நிலையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் யாரும் மறுக்க இயலாத உண்மை. சரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம்.

ப்படித்தான் ஒரு முறை ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். பிற புரதான காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
ந்தக் காலத்தின் சூரியனின் தோற்றம் மற்றும் சூரியனின் மறைவை வைத்து மட்டும்தான் நேரத்தைக் கணித்தார்களா நமது முன்னோர்கள் என்று பார்த்தால் அதையும் கடந்து பலப் பறவை இனங்கள் எழுப்பும் ஒலிகளைப் பயன்படுத்தியும் நேரத்தை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். நமக்கு தெரிந்த நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தத்தை வைத்து விடியலின் நேரத்தைக் கணக்கிடுவார்கள் என்பதை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த சேவல் அல்லாது மற்ற எந்தப் பறவை மனிதனின் நேர கணக்கீட்டிற்கு உதவியது என்பதையும் பார்த்துவிடலாம்.
டிகாரம் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார்ந்திருந்தன. ஆகவே மேகமூட்டமான வானிலையில் அல்லது இரவில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவகாலம் மாறும்போது மீண்டும் அளவுத்திருத்தம் செய்யவேண்டியும் இருந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற்றிய, நீரினால் இயங்கும் ஒழுங்படுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையுடன் ஆரம்பகாலத்திலிருந்த கடிகாரமானது, கி.மு மூன்றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத்துக்குரியதாகும்.
பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியாளர்கள் கண்டுபிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சியால் இன்று கடிகாரத்தில் வளர்ச்சி பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே...!!
பின் வரும் பறவைகளின் சத்தங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரத்தை கணக்கிட மிகவும் உதவியாக இன்றும் பயன்படுகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < >   3 மணி.
செம்போத்து .சத்தமிடும் நேரம் < >  3-30 மணி

குயில் கூவும்  நேரம் < >    4-00 மணி.

சேவல் கூவும் நேரம் < >    4-30 மணி.

காகம் கரையும்  நேரம் < > 5-00 மணி.

மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < >  6-00 மணி.
ன்ன நண்பர்களே..! இனி கிராமப் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்டு இருக்கும் பறவைகளில் ஏதேனும் ஒன்றின் சத்தத்தை காலை நேரத்தில் நீங்கள் கேட்க நேர்ந்தால் நேரத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆயிரம் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் இதுபோன்ற யதார்த்தங்களுக்கு நிகர் இந்த யதார்த்தங்களே என்பது மட்டும் திண்ணம்.

ரி நண்பர்களே..! நேரம் இல்லாததால் நேரத்தை கணக்கிடும் ஆதிகால முறைப் பற்றி எழுதிவிட்டேன் பிடித்து இருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள். எனக்கும் கிரிக்கெட் விளையாட நேரம் ஆகிடுச்சு நாளை பார்க்கலாம்.  
* * * * * * *

Sep 20, 2012

Wi-Fi வலைப்பின்னலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள்

Wireless Internet Network என அழைக்கப்படும் Wi-Fi இன்டர்நெட் இணைப்பின் மூலம் நாம் எந்த இடத்திலும் இருந்து இணையத்தை பயன்படுத்தலாம். கேபிளை இணைக்காமல் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம். இருப்பினும் இதிலும் பல தொல்லைகளை சந்திக்க நேரிடலாம். இணைய இணைப்பை தரும் ரேடியோ அலைகளுக்கு பல தடைகள் உருவாகின்றன.
சிக்னல் வட்டம் சுருங்குதல், வன்தட்டு பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத்

தொப்பையை குறைக்க இலகு வழி..


உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது
. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது.
அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!
* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட

மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்..

. நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.



1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய்

Sep 19, 2012

மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது: சந்திரபாபு நாயுடு

மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது: சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத், செப். 20 -
 
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கமாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது நம்பிக்கையில்லாமல் வெளியேறியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் தன்னிச்சையான முடிவே காரணம். ஆளும் காங்கிரஸ் கட்சி பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எந்த வலிமையையும் இல்லாமல் இருக்கிறது. இப்போது உள்ள நிலையில் மூன்றாவது அணி அமைவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ் Washington வியாழக்கிழமை, செப்டம்பர் 20


 
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ்பார்ப்ஸ் மேகசின் என்ற பத்திரிக்கை, உலகம் மற்றும் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருப்பவர்கள் பட்டியலை வெளியீட்டு வருகிறது.
 
அப்பத்திரிக்கை இப்பொழுது அமெரிக்க பணக்காரர்களில் முதல் பத்து பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் இந்த வருடமும் முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
 
சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஜாம்பவானாக

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி




ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றிஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 29-ம் நிலை வீரர் அஜய் ஜெயராம் (இந்தியா) 21-14, 21-14 என்ற நேர்செட்டில் சிங்கப்பூர் வீரர் ஜி லியாங் டெரக்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து 21-18, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை காரி இமாபெப்பை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 57 நிமிடம் தேவைப்பட்டது.

இந்திய வீரர்கள் காஷ்யாப், குருசாய்துத், சாய் பிரனீத் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்தி

 
 ஜூபா, செப். 20
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்திஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தங்க சுத்திகரிப்பு ஆலையை சூடான் அதிபர் ஓமர் அல்பஷீர் திறந்து வைத்தார். இந்த ஆலை ஒரு நாளைக்கு 900 கிலோ தங்கத்தையும் மற்றும் 200 கிலோ வெள்ளியையும் உற்பத்தி செய்யும். கடந்த வருடம் தெற்கு சூடான் தனியாக பிரிந்து சென்றது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணை வருமான இழப்பை சரிசெய்ய இந்த ஏற்பாடை சூடான் அரசு -செய்துள்ளது.
 
சூடானில் உள்ள தங்கத் தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 328 டன் தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை உற்பத்தியின் மூலம் சுமார் 300 கோடி டாலர் அளவிற்கு தங்கம் விற்பனை செய்ய எதிர் பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் தங்கம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வரும் தங்கத்தையும் இங்கு சுத்திகரிப்பு செய்ய முடியும்.

ஈரான் மீது படையெடுப்பதற்கான அதிகாரம் ஒபாமாவுக்கு உள்ளது! - ஐ.நாவுக்கான தூதுவர் தெரிவிப்பு

ஈரான் அணுகுண்டுகளை பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கும் என்று ஐ.நா. அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறினார்

.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறியதாவது.
ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. இவ்விசயத்தில் அதிபர் பராக் ஒபாமா மிகத் தெள்ளத்தெளிவான முடிவில் உள்ளார். அவ்வாறு நடப்பதை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். ராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளும் அந்நாட்டிற்கு எதிராக தயாராக உள்ளன. இது ஒரு நசுக்கும் கொள்கையாக இருக்கவில்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...