Sep 19, 2012

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்தி

 
 ஜூபா, செப். 20
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்திஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தங்க சுத்திகரிப்பு ஆலையை சூடான் அதிபர் ஓமர் அல்பஷீர் திறந்து வைத்தார். இந்த ஆலை ஒரு நாளைக்கு 900 கிலோ தங்கத்தையும் மற்றும் 200 கிலோ வெள்ளியையும் உற்பத்தி செய்யும். கடந்த வருடம் தெற்கு சூடான் தனியாக பிரிந்து சென்றது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணை வருமான இழப்பை சரிசெய்ய இந்த ஏற்பாடை சூடான் அரசு -செய்துள்ளது.
 
சூடானில் உள்ள தங்கத் தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 328 டன் தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை உற்பத்தியின் மூலம் சுமார் 300 கோடி டாலர் அளவிற்கு தங்கம் விற்பனை செய்ய எதிர் பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் தங்கம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வரும் தங்கத்தையும் இங்கு சுத்திகரிப்பு செய்ய முடியும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...