பார்ப்ஸ்
மேகசின் என்ற பத்திரிக்கை, உலகம் மற்றும் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில்
முதலிடத்தில் இருப்பவர்கள் பட்டியலை வெளியீட்டு வருகிறது.
அப்பத்திரிக்கை
இப்பொழுது அமெரிக்க பணக்காரர்களில் முதல் பத்து பேர் பட்டியலை
வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர்
பில் கேட்ஸ் இந்த வருடமும் முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
சாப்ட்வேர்
தொழில் நுட்பத்தில் ஜாம்பவானாக இருந்து வரும் அவரின் சொத்து மதிப்பு 66
பில்லியன் டாலர் என்று அது கூறியுள்ளது. அதாவது இந்திய மதிப்பிற்கு மூன்று
லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ஆகும்.
கடந்த
வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அவரின் சொத்து மதிப்பு ரூபாய் 700
கோடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 46 பில்லியன்
டாலருடன் பெர்க்சைர் ஹாத்வே நிர்வனத்தின் அதிபர் வாரன் பப்பெட் இரண்டாம்
இடத்திலும், 41 பில்லியன் டாலர் மதிப்புடன் ஆராக்ல் நிறுவனத்தின் அதிபர்
லார்ரி எல்லிசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
No comments:
Post a Comment