ஹைதராபாத்: ஆந்திராவை
பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்தே
விலகிவிடுவோம் என்று 6 அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள்
அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சாதகமான முடிவை அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூண்டோடு காங்கிரசில் ஐக்கியமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசில் இருந்து திரிணாமுல் வெளியேறிவிட்ட நிலையில் இப்போது சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது. ஆனாலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அப்படியே காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பை சற்றேனும் சமாளிக்கலாம் என்பதுதான் காங்கிரஸின் கணக்கு.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா