Oct 9, 2012

உலக நாணயத்தாள்கள்



உலக நாணயத்தாள்கள் தொடர்பான சுவையான தகவல்கள்.....

Ø பாகிஸ்தான் பயன்படுத்திய இந்திய நாணயத்தாள்கள்.|

 
1947ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பின்னர்  முதல் குறிப்பிட்ட  சில மாதங்கள் பாகிஸ்தான் நாட்டில் நாணயச்சுற்றோட்டத்திற்கு போதுமான பாகிஸ்தான் நாணயத்தாள்கள் இல்லாமையினால் இந்திய நாணயத்தாள்களில் பாகிஸ்தான் என்ற முத்திரையினையிட்ட நாணயத்தாள்களே புழக்கத்திலிருந்தன.

Ø அவுஸ்திரேலிய டொலர்.|

 
1966ம் ஆண்டு அவுஸ்திரேலியா நாடானது டொலர் நாணய அலகிற்குள் தன்னை உள்வாங்கிக்கொள்ள முன்னர் அதன் உத்தியோகபூர்வ நாணய அலகாக அவுஸ்திரேலியன் பவுண் விளங்கியது. தொடக்கத்தில் அவுஸ்திரேலிய டொலருக்கு "றோயல்" என்ற பெயரே வழங்கப்பட்டது. இந்த பெயரானது உள்ளூர் மக்களிடையே பிரபல்யம் அடையாமையினால் டொலர் என மாற்றம் செய்யப்பட்டது.

Ø அமெரிக்க டொலர்.|

 
அமெரிக்க டொலரினைக் குறிப்பிடுவதற்கு $ என்ற குறியீடானது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் $ என்கின்ற குறியீடானது அமெரிக்க நாணயத்தாள்களில் இதுவரை தோற்றம் பெற்றதில்லை.

Ø பூட்டான் பண்டமாற்று முறை.|

 
1974ம் ஆண்டிற்கு முன்னர் பூட்டான் நாட்டில் எந்தவிதமான  நாணயங்களும் பாவனையில் இருக்கவில்லை. மாறாக பண்டமாற்று முறையையே(பொருட்கள், சேவைகளுக்குப் பதிலாக பொருட்கள், சேவைகளை வழங்குதல்) மாற்றாகப் பயன்படுத்தினர். பூட்டான் 1974ம் ஆண்டு தனது நாணய அலகாக நகுல்ட்ரம்  இனை அறிமுகப்படுத்தியது.

Ø எலிசபெத் மகாராணியாரின் உருவப்படம்.|

 
எலிசபெத் மகாராணியாரின் உருவப்படம் 33 நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்கின்றது. அவரின் உருவப்படம் முதன்முதலில் 1935ம் ஆண்டு கனடா நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளித்தபோது அவரின் வயது 9 ஆண்டுகளாகும்.
மகாராணியின் உருவப்படம் பல்வேறு நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்க காரணம் யாதெனில் இந்த நாடுகள் பொதுநலவாயத்தில் அங்கம்வகிப்பதுடன் அந்த நாடுகள் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் இருந்தமையாலாகும்.

Ø இந்திய  நாணயத்தாள்கள்.|

 
இந்திய நாட்டு நாணயத்தாள்களில் ஒரு ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தினைக் கொண்டிருப்பதுடன், இரண்டு ரூபா மற்றும் அதற்கும் மேற்பட்ட பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய மத்திய வங்கியின் ஆளுனரின் கையொப்பத்தினைக் கொண்டிருக்கும்.

Ø நாணய அலகுகள்.|

 
உலகில் 5 நாணய அலகுகளே தன்னை பிரதிநிதித்துவப்படுத்த தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. அவையான அமெரிக்க டொலர், ஜப்பான் யென், பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண், யூரோ, இந்திய ரூபாய். 

 
இவற்றில் பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண் நாணய அடையாளம் மட்டுமே நாணயத்தாள்களில் அச்சிடப்படுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்

4) USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.

.

1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.

2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.

3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5'4")











5) USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.









6) USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )

அதிவேக பயணிகள் விமானத்தில் பயணம் செல்ல தயாராகிவிட்டீர்களா?


2003 மே 21ம் திகதி கொன்கோர்ட் (Concorde) விமானமானது தனது இறுதிப்பறப்பினை நியூயோர்க் நகரத்திலிருந்து பாரிஸ் நகரத்தை நோக்கி 2500km/h(1553mph) க்கும் அதிகமான வேகத்தில் 4 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தினை எடுத்துக்கொண்டது. 27வருடங்களாக வான்பரப்பில் பறப்பினை மேற்கொண்ட இந்த அழகிய Franco - British பறவை என வர்ணிக்கப்படும் இந்த கொன்கோர்ட்டானது நீண்டதூர விமானப்போக்குவரத்து உயர்சந்தையில் நிரந்தரமாக கூடு கட்டத் தவறிவிட்டது.







பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்.....

அண்டவெளியிலிருந்து பூமியில் விழுந்து கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்லாக "ஹோவா விண்கல்" விளங்குகின்றது.


1920ம் ஆண்டு நமீபிய நாட்டின்(அக்காலகட்டத்தில் தென் மேற்கு ஆபிரிக்கா என்றழைக்கப்பட்டது) வடபகுதியில் குரூட்ஃபொன்ரெய்ன் பகுதியினைச் சேர்ந்த ஜே.பிரிட்ஸ் என்கின்ற விவசாயி தனது நிலத்தினை விவசாய செய்கைபண்ண உழுதபோது நிலத்தில் புதையுண்டிருந்தநிலையில் பிரமாண்டமான கல்லொன்று இருப்பதனைக் கண்டுபிடித்தார். இக்கல்லினை ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானிகள் இரும்புத்தாதுக்கள் நிறைந்த விண்கல் என்பதனை உறுதிப்படுத்தினார்கள்.

பிரமாண்டமான நிறையின் காரணமாக இவ்விண்கல்லினை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு நகர்த்தமுடியவில்லை. எனினும் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கல்வீச்சு வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் இவ்விண்கல்லின் பெரும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விண்கல்லானது 9அடி நீளம், 9அடி அகலம், மற்றும் 3அடி தடிப்பத்தினைக் கொண்டதாகும்.

"ஹோவா வெஸ்ட்" என்கின்ற பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணத்தினால் "ஹோவா விண்கல்" என்றழைக்கப்படுகின்ற இவ்விண்கல்லானது 80000 ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவ்விண்கல்லில், இரும்புத்தாதுக்கள்82.4%,  நிக்கல்16.4%, கோபால்ட்0.76% மற்றும் பொஸ்பரஸ் 0.04%, செம்பு, நாகம், காபன், சல்பர், குரோமியம் , கல்லியம்,  ஜெர்மனியும் ,  இரிடியம்   மூலகங்கள் சிறிதளவும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


 
ஹோவா விண்கல்லினை கெளரவிக்கும் நமீபிய தபால் முத்திரை

"உலக தபால் தினம்" → ஒக்டோபர் மாதம் 9ம் திகதி



ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" கொண்டாடப்படுகின்றது. உலக தபால் சங்கம் 1874ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைக்கப்பட்ட நிறைவினையொட்டி 1969ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் உலக தபால் சங்க சம்மேளனத்தில் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" என பிரகடனம்செய்யப்பட்டது.
இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தொடர்பாடல் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையானது

Oct 8, 2012

மாணவரின் மொபைல்போன் தொழில்நுட்ப ஆய்வுப் பணிக்குப் பரிசு

உலகிலேயே மிகவும் வயதான பெண் காலமானார்

உலகிலேயே மிகவும் வயதானவராகக் கருதப்பட்ட 132 வயது மூதாட்டி, ஜார்ஜியாவில் காலமானார்.
 முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுள் ஒன்றான ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் அண்டிசா க்விசாவா. அவர் வைத்திருந்த ஆவணங்களில் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8-ல் அவர் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டன. ஆவணங்களில் இருப்பது அவரது சரியான பிறந்த நாள்தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஜார்ஜியாவின் தொலைதூர மலைக் கிராமமான சாச்சினோவில் வசித்த அவர் தேயிலை பறிப்பவராக வேலை பார்த்து வந்தார். இந்தப் பணியில் இருந்து 1965ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோது ஆண்டிசாவுக்கு வயது 85 என்று கூறப்பட்டது.
 அவருக்கு 12 பேரக் குழந்தைகளும், 18 கொள்ளுப் பேரக் குழந்தைகளும்

பிரிட்டன், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஜான் கர்டன், ஷின்யா யமனாகா

ஜான் கர்டன், ஷின்யா யமனாகா ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்காக பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கர்டனுக்கும், ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனாகாவுக்கும் இந்த ஆண்டுக்கான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 ÷மருத்துவம், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம், வேதியியில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சேவையாற்றும் நிபுணர்களுக்கு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரைச் சேர்ந்த நோபல் பரிசுக் குழு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல்

கம்ப்யூட்டரை அசெம்பிள் செய்வது எப்படி












உலக சனத்தொகை 7 பில்லியன், அதில் ஒரு பில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மகிழ்ச்சியில் சூக்கர் பேர்க்

உலக சனத்தொகை 7 பில்லியன், அதில் ஒரு பில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மகிழ்ச்சியில் சூக்கர் பேர்க்

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக், ஒரு பில்லியன் பாவணையாளர்களை கடந்துள்ளது.2004ம் ஆண்டு மார்க் சூக்கர் பேர்க்கரினால் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் இத்தளம், தற்போது, 1.13 டிரில்லியன் லைக்ஸ், 219 பில்லியன் புகைப்படங்கள், 17 மில்லியன் அங்கத்துவர்களின் இட விபரம் என்பவற்றை கொண்டிருக்கிறது.
எனக்கும், எனது சிறிய குழுவினருக்கும் உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் கொடுக்கும் உயர்ந்த கௌரவத்திற்கு மிக்க நன்றி என இந்நாளில் சூக்கர் பேர்க் தனது பேஸ்புக் ஸ்டேடஸில் அப்டேட் செய்துள்ளார்
குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...