உலக நாணயத்தாள்கள்
தொடர்பான சுவையான தகவல்கள்.....
Ø பாகிஸ்தான்
பயன்படுத்திய இந்திய நாணயத்தாள்கள்….|
1947ம் ஆண்டு
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் பின்னர் முதல் குறிப்பிட்ட சில மாதங்கள் பாகிஸ்தான் நாட்டில்
நாணயச்சுற்றோட்டத்திற்கு போதுமான பாகிஸ்தான் நாணயத்தாள்கள் இல்லாமையினால் இந்திய
நாணயத்தாள்களில் பாகிஸ்தான் என்ற முத்திரையினையிட்ட நாணயத்தாள்களே
புழக்கத்திலிருந்தன.
Ø அவுஸ்திரேலிய
டொலர்….|
1966ம் ஆண்டு
அவுஸ்திரேலியா நாடானது டொலர் நாணய அலகிற்குள் தன்னை உள்வாங்கிக்கொள்ள முன்னர் அதன்
உத்தியோகபூர்வ நாணய அலகாக அவுஸ்திரேலியன் பவுண் விளங்கியது. தொடக்கத்தில் அவுஸ்திரேலிய
டொலருக்கு "றோயல்" என்ற பெயரே
வழங்கப்பட்டது. இந்த பெயரானது உள்ளூர் மக்களிடையே பிரபல்யம் அடையாமையினால் டொலர்
என மாற்றம் செய்யப்பட்டது.
Ø அமெரிக்க டொலர்….|
அமெரிக்க
டொலரினைக் குறிப்பிடுவதற்கு $ என்ற குறியீடானது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் $ என்கின்ற
குறியீடானது அமெரிக்க நாணயத்தாள்களில் இதுவரை தோற்றம் பெற்றதில்லை.
Ø பூட்டான் பண்டமாற்று
முறை….|
1974ம் ஆண்டிற்கு
முன்னர் பூட்டான் நாட்டில் எந்தவிதமான நாணயங்களும் பாவனையில் இருக்கவில்லை. மாறாக
பண்டமாற்று முறையையே(பொருட்கள், சேவைகளுக்குப் பதிலாக பொருட்கள், சேவைகளை
வழங்குதல்) மாற்றாகப் பயன்படுத்தினர். பூட்டான் 1974ம் ஆண்டு தனது நாணய அலகாக நகுல்ட்ரம் இனை அறிமுகப்படுத்தியது.
Ø எலிசபெத்
மகாராணியாரின் உருவப்படம்….|
எலிசபெத்
மகாராணியாரின் உருவப்படம் 33 நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்கின்றது. அவரின்
உருவப்படம் முதன்முதலில் 1935ம் ஆண்டு கனடா நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளித்தபோது
அவரின் வயது 9 ஆண்டுகளாகும்.
மகாராணியின்
உருவப்படம் பல்வேறு நாட்டு நாணயத்தாள்களில் தோற்றமளிக்க காரணம் யாதெனில் இந்த
நாடுகள் பொதுநலவாயத்தில் அங்கம்வகிப்பதுடன் அந்த நாடுகள் பிரிட்டிஷ்
முடியாட்சியின் கீழ் இருந்தமையாலாகும்.
Ø இந்திய நாணயத்தாள்கள்….|
இந்திய நாட்டு நாணயத்தாள்களில்
ஒரு ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சின்
செயலாளரின் கையொப்பத்தினைக் கொண்டிருப்பதுடன், இரண்டு ரூபா மற்றும் அதற்கும்
மேற்பட்ட பெறுமதியான நாணயத்தாள்கள் இந்திய மத்திய வங்கியின் ஆளுனரின்
கையொப்பத்தினைக் கொண்டிருக்கும்.
Ø நாணய அலகுகள்….|
உலகில் 5 நாணய
அலகுகளே தன்னை பிரதிநிதித்துவப்படுத்த தனித்துவமான அடையாளங்களைக்
கொண்டிருக்கின்றன. அவையான அமெரிக்க டொலர், ஜப்பான் யென், பிரிட்டிஷ் ஸ்ரேலிங்
பவுண், யூரோ, இந்திய ரூபாய்.
No comments:
Post a Comment