Oct 16, 2012

மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஜூன் மாதம், தான் வடிவமைத்து தயாரிக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசி மற்றும் விண்டோஸ் போன் 8 குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது.

இவை இரண்டும் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. சர்பேஸ் டேப்ளட் அக்டோபர் 25 அன்றும், விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29 அன்றும் வெளியிடப்படும்.

சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட் பிசியில் 10 அங்குல திரை, டச் ஸ்கிரீன் டிஸ்பிளே சிறப்பு அம்சங்களாக இருக்கும். இதில் ஏ.ஆர்.எம். ப்ராசசர் இயங்கும். 

மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், யு.எஸ்.பி.2 போர்ட், மைக்ரோ எச்.டி. வீடியோ, சிறப்பான வைபி இணைப்பிற்காக 2x2 MIMO ஆன்டென்னா ஆகியவை தரப்படும். 

விண்டோஸ் 8 போன் வெளியிடப்படுகையில், முழுமையான இதன் பயன்பாடு காட்டப்படும். 

நோக்கியாவின் லூமியா மற்றும் எச்.டி.சி. யின் இணையான போன்கள் வெளியிடப்பட இருப்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் ஸ்மார்ட் போன் வெளியீடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் வெளியிடப்படும் இவை விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

Oct 15, 2012

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் ஈன்ற தாய்! கண்டியில் இன்று அதிசயம்!!

கண்டி ஆதார    வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் இன்று அதிகாலை பெற்றெடுத்துள்ளார்.


ஐந்து பிள்ளைகளில், ஆண்கள் குழந்தைகள் மூவர் எனவும் பெண் குழந்தைகள் இருவரும் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

29 வயதான தாயார் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

வியப்பைத் தரும் விண்டோஸ் 8

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது.

வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து

விண்டோஸ் 7 டிப்ஸ் - ட்ரிக்ஸ்


விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. பைல்கள் இடையே எளிதாக:

ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம்.

எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய

விண்டோஸ் 7 சிஸ்டம் ரெஸ்டோர்


விண்டோஸ் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டர் பயன்பாடு முடங்கிப் போகும் போது, முந்தைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயங்க வைத்திட, விண்டோஸ் சிஸ்டம் தனக்குள் கொண்டிருப்பது சிஸ்டம் ரெஸ்டோர் வசதியாகும்.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த சிஸ்டம் ரெஸ்டோர் இன்னும் கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது எளிது என்றாலும், புத்திசாலித்தனமாக இதனைப் பயன்படுத்தினால் அதிகம் பயன் கிடைக்கும். அதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.

1. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் செயல்பாடு: சிஸ்டம் ரெஸ்டோர், உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன்

விண்டோஸ் 7 வேகமாக இயங்க

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க:

கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல்

விண்டோஸ் 7 வெற்றி


மிக வேகமாக விற்பனை செய்யப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில், 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.

இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது.

இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான்

2012ல் கம்ப்யூட்டரும் இணையமும்

  எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட்

கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில்,

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் PC

1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைத் தொடங்கினார். அப்போதிருந்த மைக்ரோ கம்ப்யூட்டரில் பயன்படுத்த பேசிக் என்னும் புரோகிராமிங் மொழியை அவர்கள் விற்பனை செய்திட முயற்சித்தனர்.

தொடர்ந்து சாப்ட்வேர் புரோகிராம்களையே தயாரித்த இந்நிறுவனம், அவற்றின் மூலம் இந்த உலகை மாற்றி அமைத்தன. மனித இனத்தின் சிந்தனைப் போக்கையே அடியோடு புரட்டிப் போட்டன.


இப்போது முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில், மைக் ரோசாப்ட், முற்றிலும் புதிய முயற்சியாக, ஹார்ட்வேர் பிரிவில், டேப்ளட்

2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்


சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri):

ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை

மொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற

மொபைல் போன் பயன்பாட்டில் எண்கள் நமக்கு மாறா அடையாளத்தைக் கொடுக்கின்றன. இதனால், குறிப்பிட்ட நிறுவனம் வழங்கும் சேவை மோசமாக இருந்தாலும், பலரும் அதனைச் சகித்துக் கொண்டு அதே நிறுவனத்திடமிருந்து மொபைல் சேவை பெற்று வருகின்றனர்.

இந்த சிக்கலைத் தீர்க்கவே, அரசு மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை தரும் இன்னொரு நிறுவனத்தில் இணைந்து கொள்ளும் வசதியை அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்து அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தியது.

சென்ற ஏப்ரலில் மட்டும் எண்ணை மாற்றாமல் நிறுவனத்திற்கு மாறக் கூடிய வசதியைக் கேட்டு 40 லட்சத்து 14 ஆயிரத்து 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுடன் இதுவரை இவ்வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்து 900 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டதாக கர்நாடக மாநிலம் உள்ளது.

இந்த பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில், 26 லட்சத்து 39 ஆயிரத்து 679 விண்ணப்பங்களுடன் உள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...