வெந்தயத்தின் மருத்துவக்குணம்.
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.
வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.
வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா