மனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ''நேச்சர்'' என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர். வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.
ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.
வயதாகச் செய்யும் இரசாயனம்
அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனணத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது கண்டறியப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா