பொதுவாகவே நாம் நமது உடல் உறுப்புகளைப் பராமரிப்பதில் அலட்சியம் செய்கிறோம். அதுவே பல உடல் உபாதைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பது காது. காது குடாய்வதை பலரும் ஒரு அன்றாட பழக்கமாகவே வைத்திருப்பார்கள். காதின் ஓட்டைக்குள் போகும் அளவுக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைக் கொண்டு காதை குடைவார்கள்.
பெரியவர்கள் என்றால் பரவாயில்லை.. சிறிய குழந்தைகளுக்கு காதுகளைப் பற்றி என்ன தெரியும். அவர்கள் செய்யும் சில காரியங்கள் காதுகளை வெகுவாக பாதித்து விடுகின்றன.
ஒரு காது மருத்துவ நிபுணர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, சிறுவர்களின் காதுகளில் ஏதேனும் பிரச்னை என்று என்னிடம் அழைத்து வரும் போது, அவர்களது காதுகளில் இருந்து சிறிய பட்டன், செல்பேசியின் கீஸ், பல், மணி என எத்தனையோ விஷயங்களை எடுத்திருக்கிறோம்.
சில குழந்தைகளின் காதுகளில் பூண்டு, பூண்டு தோல் ஆகியவையும் இருந்துள்ளன. இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால், பூண்டு காதுக்கு நல்லது என்று சொன்னார்கள்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா