சமையல்
என்பது வேலை மட்டும் அல்ல... கலையும்கூட! இந்தக்
கலையில் வல்லமை
படைத்தவர்கள், சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதுடன், உங்கள் சமையல்
மிகச் சிறப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தரும் பகுதி இது. இந்த இதழில்
உங்களுக்கு உதவ வருபவர் லஷ்மி ஸ்ரீநிவாசன்.
மாம்பழம் புளிப்பாக இருந்தால் என்ன செய்யலாம்?
சிறிதளவு சர்க்கரை சேர்த்து மில்க்ஷேக் செய்யலாம். அல்லது, சிறிதளவு வெல்லம் சேர்த்து மாம்பழ சாம்பார் செய்யலாம்.
வீட்டில் திராட்சை அதிகமாக இருந்தால், அதை வேறு வகையில் பயன்படுத்துவது எப்படி?
கடாயில் எண்ணெய் விட்டு சிறிது கடுகு, பெருங்காயத்தூள்
தாளித்து, திராட்சைப் பழத்தை விதை நீக்கி சேர்த்து வதக்கி... உப்பு,
மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சுவையான திராட்சை தொக்கு தயாரிக்
கலாம். சிறிதளவு வெந்தயப் பொடியும் சேர்க்க மறக்க வேண்டாம்.
அவியல் மிகுதியாகிவிட்டால் அதை என்ன செய்யலாம்?
நீரை வடித்து, காய்கறிகளை அலசி எடுத்து, நறுக்கிய
வெங்காயம் உப்பு, காரம் சேர்த்து பூரணம் செய்து, அதை வைத்து சமோசா/கட்லெட்
செய்யலாம்.
அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சத்தான சாதம் ஊட்டுவது எப்படி?
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா