ஒவ்வொரு
கீரையிலும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. ஆகையினால் தினம் ஒரு கீரையைப்
பயன்படுத்தி முன் கூட்டியே நோய் வராமல் பாதுகாப்போம்.
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கையும் ஒன்று.
அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் விற்றமின் A,B,C ஆகிய
உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச்
சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இது குளிர்ச்சியைத் தர வல்லது. இக்கீரை உடல்
வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது.
பித்தத்தைத்
தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள்
இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். சிலருக்கு குரல் வளையில்
வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும்
வலியும் குணமாகும். வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு
வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள்
இரத்தத்துடன் கலக்க உதவும்.
மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள்
இருந்தாலும் அதை மலத்துடன்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா