Aug 28, 2012

ஆம்ஸ்டிராங் மறைவுக்கு அனுதாபம்: அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவு


neel_28வாஷிங்டன் : நிலவில் முதல் முதலில் கால் வைத்த அமெரிக்கா விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்டிராங் (வயது 82) கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு ஒஹிகோ மாகாணத்திலுள்ள சின்சின்னாத் நகரில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. ஆம்ஸ்டிராங்கின் இறுதி சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஒஹிகோ பகுதி குடியரசு கட்சி எம்.பி. கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் ஆம்ஸ்டிராங் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவிட்டார். ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை, அனைத்து அரசு அலுவலகங்கள், ராணுவம் உள்ளிட்ட முப்படை முகாம்கள், கப்பல்கள், தூதரகங்கள் ஆகியவற்றில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...