Aug 28, 2012

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்


இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க் கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு,
அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்றுபயன்படுத்தக்கூடிய வசதிதரப்பட்டு ள்ளது. ஆனால் இந்தவசதி அனைத் துபோன்களுக்கும் கிடைப்பதில்லை .
இதேபோல ஆன்லைனில் சேமித்து வைக்கக்கூடிய வசதி ஒன்றினை ஓர் இணையதளம் தருகிறது. இந்த சே வையின் பெயர் rSeven. இதனை htt p://www.rseven.com என்ற முகவரி யில் உள்ள இணைய தளத்திலிருந் து Download செய்து, மொபைல்போ னில் பதியவும்.
இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்த வை, சிம்பியன்எஸ்60, மூன் றாவது மற்றும் ஐந்தாவது எடி ஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல் படுகிறது.
இதனைப்பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல்போனில் உள்ள அனைத்து டேட்டாவி னையும், இத்தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்துபோகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம். 




No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...