Aug 28, 2012

குழந்தைகளை தாக்கும் இருதய நோய்


குழந்தைகளுக்கு பொதுவாக காணப்படும் மற்றொரு வியாதி "எம்.வி.பி.எஸ்'' எனப் படுகிறது. அதாவது இடது புறம் உள்ள இரண்டு இதழ்களை கொண்ட மைட்ரல் வால்வு களில் ஏதேனும் ஒரு இதழோ அல்லது இரண்டு இதழ்களுமோ, நீளம் அதிகமாக இருக்கும். இதனால் சரியாக மூடாமல், சற்று உள்நோக்கி மடங்கிவிடும். இதனால் நெஞ் சில் படபடப்பு, மயக்கம், பயம் போன்றவை தோன்றும்.

ஆசியாவில், அதிலும் இந்தியா வில் அதிகம் காணப்படும் வியாதி. பிறவியிலே குழந்தைகளுக்கு இது போன்ற பல வியாதிகள் இருக்கும். சில நோய்கள் பிறந்த பிறகு தொத்து வியாதிகளினாலோ அல்லது மற்ற காரணங்களினாலோ வருகின்றன. குழந்தை பிறக்கும் பொழுது, தாய்க்கு பால்வினை நோய் இருப்பின் மைட்ரல் வால்வு சுருங்கிப்போய்விடும்.

அல்லது மரபு அணுக்களின் மாறுதலினால் மூட்டு வாதம்- ருமாட்டிக் ஜுரம் வந்தால் அது இருதயத்தை மிகவும் பாதிக்கும். பொதுவாக சில குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வரும். முட்டி வீங்கும், கை கால்களில் வலி என்று கூறும். சாதாரண ஜுரம் என்று நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. குழந்தை ஓடி ஆடி விளையாடுவதால் கால்வலி என நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது.

உடனே மருத்துவரிடம் சென்று ரத்தப் பரிசோதனை செய்து
ருமாட்டிஸம் இருக்கா இல்லையா என்பதை தீர்மானித்து, அப்படி இருந்தால் அதற்கான மருந்து மாத்திரைகளை தந்தால் இருதயத்தை காப்பாற்றலாம். விளம்பரங்களின் கவர்ச்சியில் மயங்கி, கொழுப்பு அதிகமாக உள்ள தின்பண்டங்களையும், பாஸ்தா, பீசா, பர்கர், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை தினமும் அதிகமாக சாப்பிடுவதாலும், உட்கார்ந்த இடத்திலேயே கணினியில் வீடியோ கேம்ஸ் ஆடுவதாலோ, உடல் எடை கூடுகின்றது.

இதனால் பல இருதய நோய்கள் எளிதில் சின்ன வயதிலேயே வருகின்றன. சில குழந்தைகள் அசுத்தமான கலப்படமுள்ள, ஐஸ் மற்றும் ஐஸ் கட்டிகளை சாப்பிடு கின்றனர். இதனால் தொண்டையில் உள்ள டான்சில்களில் கிருமிகள் தாக்கி, டான்சில் சீழ் பிடித்து, ஜுரம் வரும். இப்படிவரும் சில கிருமிகள் இருதயத்தையும் தாக்கும்.
இந்த நோய்களுக்கான பொதுவான அறிகுறிகள் :
மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிகமாக வியர்த்தல், உடல் எடை மிகவும் கூடுதலாக இருத்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், உடல் நீல நிறமாக மாறுதல், நடுக்கம், நெஞ்சில் பட படப்பு ஏற்படுதல், நினைவு இழந்து போகுதல், அடிக்கடி, இருமல், ஜுரம் வருதல், முட்டி வீங்கி, ஜுரம் வருதல். ஆரம்ப நாட்களிலேயே, அறிகுறிகளை அறிந்தால் சிகிச்சை பெற்று சரி செய்திடலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய நோய்களை கண்டறியவும், இலவசமாக சிகிச்சை பெறவும் அரிமா சங்கம் போன்ற பன்னாட்டு சேவை அமைப்புகளும் உதவுகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...