
எமது அன்றாட வாழ்வில்கூட குடிப்பதற்காக உழைத்து நிறைபோதையில்
சுழன்றுவிழும் குடிமகன்களையும் கண்டிருக்கின்றோம், அதேபோல ஏழுநட்சத்திர
ஹோட்டல்களில் ஆடம்பர மிடுக்கோடு விதவிதமான விலையுயர்ந்த குடிபானங்களை
உட்கொள்ளும் மிடுக்குகளையும் பார்த்திருக்கின்றோம்.
அந்த வகையில் உலகில் அதிகம் மிடுக்கோடு நுகரப்படும் ( ஆனந்தத்தோடு
அருந்தப்படும்) 10 குடிபானங்களை இப்போது உங்களுக்கு
ஊத்திக்கொடுக்கப்போகிறேன்......
பியர் அல்லது (இந்திய நண்பர்களுக்கு பீர்)
இன்று உலகலாவிய ரீதியில் குடிவகை பானங்கள் என்ற வகைப்படுத்தில் மிக அதிகமாக
அருந்தப்படும் பானமாக பியர் உள்ளது.
பியர் தயாரிப்பு பண்டைய நாட்களில் இருந்தே நெறிப்படுத்தப்பட்டு வருவதாக
அறியமுடிகின்றது.
'பார்லித் தண்ணி' என்று நண்பர் வட்டாரத்தில் பியரை அழைப்பத்திலும் அறிவியல்
உண்மை ஒன்று உள்ளது. குறிப்பாக பியர் வகைகள் தானியங்களில் இருந்து
பெறப்படும் மாப்பொருட்களை நொதிக்க வைத்தே வடித்தெடுக்கப்படுகின்றன.
முக்கிமாக பார்லி தானியம் இதற்கு எடுக்கப்படுகின்றது.

ரம் அண்ட் கோக்.
இது மிகப்பிரபலம் வாய்ந்த ஒரு குடிவகை. இதன் ஸ்பெசாலிட்டி மற்றும்
பிறப்பிடமாக கரேபியன் தீவுகள், கயானா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை
குறிப்பிடலாம். ரம் பொதுவாக சக்கரை, அல்லது வெல்லம், கரும்புச்சாரை
புழிக்கவைத்து உருவாக்கப்படுகின்றது.
ரம் பழுப்பு நிறம், மற்றும் வெள்ளை நிறத்திலும் அதிகமாக
வடிக்கப்படுகின்றது. அதேநேரம் கொக்ரெயில் போடுவதற்கு ரம் முக்கியமானதாக
பயன்படுகின்றது.
ரம் அண்ட் கோக் குறித்த கலவை அளவில் வெள்ளை ரம், எலுமிச்சை சாறு, மற்றும்
கோக் என்பன கலக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது.
வொட்கா அண்ட் ஒரேஞ்ச்
இது ஒரு மிகப்பிரபலமான ஒரு பானம் இந்தப்பானத்தின் ஸ்பெஸாலிட்டி என்ன எனில்
இதை குறிப்பிட்ட ஒரு குவளையிலேயே வழங்கவேண்டும்.
நல்ல உடன் பிடுங்கப்பட்ட ஒரேஞ்ச் சாற்றுடன் வரையறுக்கப்பட்ட அவளவில்
வொட்காவை மிக்ஸ்ட் பண்ணி கொடுக்கப்படுகின்றது.
தலையிடி, உடம்பு அசதியுடன் குடிக்கச்செல்பவர்களின் முதல் சொய்ஸ் இதுதான்
என்று அடித்து சொல்கின்றார்கள் அனுபவசாலிகள். காரணம் இதை லபக் செய்தவுடன்
தலையிடியும், உடல் அசதியும் போய்விடுமாம், அதன் பின்னர் வேறு விரும்பிய
போதையினை விதம் விதமாக ஓடர் பண்ணி பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்க்குரூட்ரைவர் (திருகாணியினை கழட்டும் சாதனம்) வொட்கா அண்ட் ஒரஞ்ச் இன்
அண்ணன்தான்.
ரெக்கியூலா (ரக்கிலா)

மார்கரிட்டா

50 வீதம் ரெக்கியூலா, 29 வீத ஹொயின்ரியோ, 21 வீத லைம் யூஸ், என்ற வீதத்திலான ஒரு மிக்ஸ்ஸர்தான் மார்கரிட்டா.
இதை லபக் செய்யும்போது என்ன கொஞ்சம் தொண்டையில் இருந்து குடல்வரை ஒருவித எரிவுடனேயே பானம் பயனிக்குமாம்.
இதில் ஐஸ்கட்டிகள் இடுவது மிக மக்கிமாகுமாம்.
அது சரி நல்லா யோசித்துப்பாருங்க மார்கரிட்டா கிளாஸ் என்று கேள்விப்பட்டிருப்பீங்களே?
ஆம் இதற்கும் பிரத்தியேகமான ஒரு தனித்தர குவளையிலேயே பரிமாறப்படுகின்றது.
வைய்ட் ரஸ்ஸியன்.
வோட்கா, ஹலுவா, ஐஸ் கிறீம், பால், ஹாவ் அண்ட் ஹாவ், மற்றும் ஐஸ் கட்டிகள்
கொண்டு பக்குவமாக இரண்டு தட்டுகளாக தயாரிக்கப்படுகின்றது வைய்ட் ரஸ்ஸியன்.
போதை இனிப்பாகவே கிடைக்கும்.....
செக்ஸ் ஒன் பீச்...
பெயரே ஒரு ஹிக்காத்தானே இருக்கு?
மிகப்பிரபலமான ஒரு குடிவகை இது.
வொட்கா, ஒரேஞ்ச் யூஸ், கிரான்பெரி யூஸ், சம்போhட் என்பவற்றை மிக்ஸ் பண்ணி அருந்தும் ஒரு குடிவகையே இந்த செக்ஸ் ஒன் பீச்...
இது பீச்சிலதான் குடிக்கிறதோ என்று தப்பா யோசிக்க கூடாது.
ஜஹர்...
ஜெர்மன் சரக்கு என்றாலே சும்மா கும்முனு ஏறும் ஹிக்கு தன்னாலே!
இது 1934 ஆம் ஆண்டு ஜெர்மனில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஹிக்கர்.
இதில என்ன விசியம் என்றால் நாம கௌ;விப்படுற ஐட்டங்கள் எல்லாம் இதில கலக்கப்பட்டு செய்யப்பட்டிருப்பதுதான்.
அப்படி என்ன நாம கேள்விப்பட்ட ஐட்டம் என்கிறீர்களா?
அதிமதுரம், சோம்பு, குங்குமப்பூ, பாப்பி விதைகள், இங்சி இப்படி நம்ம ஊர் சமாரங்கள் நிறைய கலக்கப்பட்டிருக்கு!
அப்ஸிந்தே

No comments:
Post a Comment