Sep 8, 2012

தித்திக்கும் தேன்


fresh honey with honeycomb, spices and fruits 
தேனை விரும்பாதோர் இல்லை. பொதுவாக இனிப்பு உடலுக்கு தீங்கானது என்பதை நாம் அறிவோம். ஆனால் தேன் இனிப்பு சுவை உடையதாக தெரிந்தாலும் உண்மையில் அது காரத் தன்மை கொண்டது. தேனில் 80% காரம் மற்றும் 20% அமிலம் கலந்து உள்ளது. தேனை அருந்தியவுடனே அது இரத்தத்தில் கலக்கும். விளையாட்டுத் துறை அன்பர்கள் இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும் வல்லமை தேனில்
உள்ளது. கழிவே இல்லாத உணவு தேன்.
தேன் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. கண் ஒளியைக் கூட்டும் சக்தி தேனில் உள்ளது. உடல் பருமன், தொப்பை உடையவர்கள் சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். நோஞ்சான் அன்பர்கள் தேனை தினமும் இரவு பாலுடன் அல்லது நீரில் கலந்து அருந்தி வர உடல் எடை பெறுவர். இதயம், ஈரல் போன்றவை பலம் பெறும். நோயாளிகள், சிறுவர்களுக்கு ஏற்ற உணவு இந்த தேன்.
தேனை எவ்வாறு சாப்பிட வேண்டும், எவற்றுடன் தேன் சேரக்கூடாது என்பதை இனி பார்க்கலாம்.
* தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.
* தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்து தான் சாபிடவேண்டும்.
* தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது.
* தேனும் நெய்யும் கலக்கக்கூடாது. கலந்தால் நஞ்சாகும்.
* தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.
* தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...