மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வளம்: ஓ.என்.ஜி.சி. அறிவிப்பு
இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி) அறிவித்துள்ளது.
இந்தியாவில் எண்ணெய் அதிகம் கிடைக்கும் டி-1 எண்ணெய் வயல் மும்பை நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் மேற்கே கடலில் அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் 90 மீட்டர் ஆழத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளிலிருந்து தான் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது டி-1 பகுதியில் புதிதாக பெரிய எண்ணெய்க் கிணறு ஒன்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-1 பகுதியிலே அதிக எண்ணெய் எடுக்கப்படும் மும்பை ஹை மற்றும் ஹீரா என்ற எண்ணெய் கிணறுகளுக்கு அடுத்தபடியாக இந்த புதிய கண்டுபிடிப்பு மாறும் என்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
டி-1 எண்ணை வளப்பகுதியில் தினத்தோறும் 12,500 பேரல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. 36000 பேரல் வரை எண்ணெய் எடுக்கக்கூடிய இவ்விடத்தில், தற்போதைய புதிய கண்டுபிடிப்பின் மூலம் அதிகபட்சமாக 60,000 பேரல் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும். அதாவது ஒரு வருடத்திற்கு மூன்று மில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த எண்ணெய் வயலில் எண்ணெய் இருப்பு 600 மில்லியன் டன்னாக உள்ளது. புதிய எண்ணெய் கிணற்றின் மூலம் அதிகமாக 1 பில்லியன் பேரல்களுக்கு மேல் இருப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி-1 எண்ணை வளப் பகுதியில் முதல் எண்ணெய் கிணறு 1976 ஆம் ஆண்டு தோண்டப்பட்டது. பிறகு எண்ணெய் வயல் மேம்பாட்டு திட்டத்தின்படி மேலும் 12 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதன. டி-1 எண்ணெய் வளப்பகுதி மேம்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment