உலகில் தோன்றிய சமயங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தொன்மையானவை. (Ancient Religions) இவை யூத மதம், இந்து மதம்,
புத்த மதம், கிறித்தவ மதம், இஸ்லாமிய மதம் என உயரிய சமயங்களாக வகைப்படுத்துகிறார்கள். மற்றொன்று சிறு சமயங்கள். அவை இந்தியாவில் தோன்றிய ஜைனம், சீக்கியம், சீனாவின் டாவோயிசம், ஜப்பானின் ஷிண்டோயிஸம் போன்றவை.
இவையெல்லாம் மனிதனை அன்பு நெறியிலும் அறவழியிலும் பண்படுத்தி அமைதியான உயர்ந்த வாழ்வு வாழத் தோன்றியவை! ஆனால் இந்த மதங்கள் யாவும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றதா?
ஒருபுறம் யூதர்கள் பாலஸ்தீனிய மண்ணை ஆக்கிரமித்து அங்கே தனக்கென ஒரு நாட்டை வல்லரசுகளின் பக்க பலத்தோடு பலவந்தமாக ஆக்கிரமித்து
செய்து வரும் அழிவுகளும் அக்கிரமங்களும் நெஞ்சை வெடிக்கச் செய்கின்றன. மறுபுறம் அமெரிக்க ஏகாதிபத்திய கிறித்தவ நாடு உலகிலுள்ள நாடுகளை யெல்லாம் ஆட்டிப்படைப்பதையும், குறிப்பாக முஸ்லிம் நாடுகளை அணுகுண்டு களால் அழித்துவருவதையும் அப்பாவி மக்களை கொன்றுகுவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.’அன்பே சிவம்’ என்னும் தத்துவத்தைக் கொண்ட இந்து மதத்தினர் இஸ்லாமியர்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதையும் பாபரி மஸ்ஜிது போன்றஅவர்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துத் தரை மட்டமாக் குவதையும் காணும்போது மதங்கள் மனிதனை அழிக்கும் ஆயுதங்களா? என எண்ணத்தோன்றுகிறது.
இன்று மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டிக் கொள்வதையும் ஒருசமுதாயம் மற்றொரு சமுதாயத்தை அழ்த்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இவர்கள் மிருகங்களைவிட படு மோசமாகச் சென்றுகொண்டிருக் கின்றனர். இதற்குகக் காரணம் என்ன?
1. தன்னைப்படைத்த இறைவன் யார்?
2. அவனது வல்லமையும் ஆற்றலும் என்ன?
3. மனித சமுதாயம் மேம்பட அவன் வழங்கிய வாழ்க்கை நெறி என்ன?
என்பதைப் புரிந்து கொள்ளாததேயாகும்.
அது மட்டுமல்ல ஆதி மனிதன் யார்? அவனது இயற்கை மார்க்கம் எது?
அது கூறும் அன்பு நெறி என்ன? அவன் வழிபட எழுந்த ஆதி ஆலயம் எது? என்பதையெல்லாம் ஒவ்வொருவரும் தெரிந்தாகவேண்டும். அப்போது தான் மனிதர்களுக்கிடையே சாந்தி, சமாதானம், அமைதி யாவும் நிலவும். ஆதி மார்க்கத்தில் அனைவரும் இணைந்து கைகோர்த்து நின்றால் தான் மனிதன் வெற்றி பெற முடியும்! இம்மை மறுமைப் பேறுகளைப் பெற முடியும்!
ஆதி மார்க்கம்-இயற்கை மார்க்கம் எது?
ஆதி மார்க்கம் (இயற்கை மார்க்கம்) எதுவென ஆராயும் போது அது ‘ இஸ்லாம்’ தான் விடை என்பதற்கு மனித சமுதாயத்திற்கு அருளப்பட்டவேதங்களிலும், இந்து மத இதிகாசங்களிலும், புராணங்களிலும் மிகத் தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன.
உலகம் தோன்றியது முதல் இறைவனால் அருளப்பட்ட முதல் மார்க்கம் இஸ்லாம் தான்! அந்த மார்க்கத்தை போதிப்பதற்காகத்தான் ஆதி இறைதூதர் ஆதம் முதல் இறுதி இறை தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை ஒரிலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறைவனால் அனுப்பப்பட்டார்கள்.
இறைதூதர் அனைவரும் போதித்தது என்ன?
‘ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும். அவனுக்கு எதையும், எவரையும் இணையாக்கக் கூடாது. என்ற ஏகத்துவக் கொள்கையைத்தான் அவர்கள் அனைவரும் மக்களுக்குப் போதித்தார்கள். அது மட்டுமல்ல, சிலை வணக்கத்தையும், குல வழக்கத்தையும,படைப்பினங்களை
இறைதூதர்கள் அனைவரின் ஒரே குரல்
‘ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும். அவனுக்கு எதையும், எவரையும் இணையாக்கக் கூடாது. என்ற ஏகத்துவக் கொள்கையைத்தான் அவர்கள் அனைவரும் மக்களுக்குப் போதித்தார்கள். அது மட்டுமல்ல, சிலை வணக்கத்தையும், குல வழக்கத்தையும,படைப்பினங்களை
இந்த ஏகத்துவத்தைத் தான் இறைதூதர் யாவரும் ஒரே குரலாக எடுத்துரைத்ததாக
அல்-மாயிதா 4:36,
அல்-அஃராஃப் 7:72, 7:65,7:73,7:85,
ஹூத் 11:50, 11:61, !!:84,
அந்நஹ்ல் 16:36,
அல்-முஃமினூன் 23: 23, 23: 32, 27:45,
அல்-அன்கபூத் 29: 16, 29:36, 71:3
போன்ற அத்தியாயங்களில் சுமார் 37 இடங்களில் திருமறை குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. எல்லா தூதர்களும் போதித்த இந்த உண்மையைத்தான்,எல்லா வேதங்களும்,குறிப்பாக இந்து வேதங்களும் இதனைத் தெளிவு படுத்துகின்றன.
கிறித்தவ வேதங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று தெய்வ(திரித்துவக்) கொள்கைக்கு எதிராகக் கூறுவதைப் பாருங்கள்:-
இயேசு கிறிஸ்து தன்னுடைய சமூகத்தவரான இஸ்ரவேலர்களிடம் ‘உன் கடவுளாகிய கர்த்தரையே நீ வணங்க வேண்டும்.அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த
சேவை செய்ய வேண்டும். (லூக்கா 4:8) என்று போதனை செய்திருக்கிறார்.
‘தேவன் ஒருவன் தான். அவன் ஒருவனைத்தான் வணங்க வேண்டும’. என்று போதிக்கவே மெய்தேவன் அனுப்பி வைத்தான் என்று கிறித்தவ வேதநூல்கள் கூறுகின்றன.
லா இலாஹ இல்லல்லாஹ் ஈஸா ரஸூலுல்லாஹ்.’வணக்கத்திற்கு
அல்லாஹ்வின் தூதராவார்கள்’ என்னும் இஸ்லாமியக் கொள்கையை ஈஸா(அலை)-(இயேசு) அவர்கள் முழங்கி வந்தார்கள். இதை பைபிள் இவ்வாறு கூறுகிறது:-
‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீ அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்’ (யோவான் 17:30)
இந்து வேதங்கள் கூறுவதைப் படியுங்கள்:-
யார் அசம்பூதி (இயற்கை)யை வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர். (அதர்வண வேதம் 40:9)
அவன் ஆதி தேவன். பிறப்பில்லாதவன். (பகவத் கீதை 10:12)
அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான்! (ரிக் வேதம் :6:45:16)
லா இலாஹ இல்லல்லாஹு – வணக்கத்திற்குரியோன் அல்லாஹவைத்தவிர வேறு எவருமில்லை என்னும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை எந்த
கருத்துச்சிதைவும் இல்லாமல் வேதங்களின் பிரம்ம சாத்திரம் கூறுகிறது.
‘ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்’
பொருள்:இறைவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இல்லவே இல்லை.
‘ஏகம் ஏவம் அத்விதியம்’
பொருள் : அவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
அடுத்து ரிக் வேதம் (6:45:16) பின்வருமாறு கூறுகிறது.
‘யா இக் இத் முஸ்திஇ’
பொருள் : வணக்கத்திற்குரியவன் இறைவள் ஒருவனே !
இன்னும் ஏகத்துவத்தை வலியுறுத்தும் சுலோகங்கள் ஏராளம் இந்து வேதங்களில் காணப்படுகின்றன.
ஆனால் தங்கள் வேதங்களிலுள்ள இந்த உண்மையைப் புரியாத பாமர கிறித்தவர்களும், இந்துக்களும்,மக்களின் அறியாமையைத் தங்களின் மூலதனமாக வைத்துப் பிழைப்பு நடத்தும் மத குருமார்களும், போலி மதவாதிகளும் மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தைப் புரியாது கண்டதையெல்லாம் கடவுளர்களாக நம்பி வாழும் அவல நிலையைத்தான் எங்கணும் காண முடிகிறது.
இதனால் ஏக இறைவனான அல்லாஹ்வையும், ஆதி மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தையும் மறந்து நரகப்படுகுழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
பல தெய்வ வணக்கம் எவ்வாறு ஏற்பட்டது?
பண்டைய நாகரிகத்தின் தந்தை நூஹ் (அலை)
வாழ்ந்த இடம் : மொசப்பட்டோமியா. (இப்போதைய ஈராக்)
யூப்ரடீஸ், டைகிரீஸ் நதிகளுக்கிடையே உள்ள நிலப்பகுதிகளுக்கு மொசப்பட்டோமியா (mesopotomia) என பெயர் வழங்கப்படும். நதிகளுக்கு இடைப்பட்ட இடம் என்பது அதன் பொருள். அதுவே இன்று ஈராக் என்று அழைக்ப்படுகிறது.
உலகிலேயே மிகப்பழமையான ஒரு நாகரீகம் அது மொசப்பட்டோமியாவில் வாழ்ந்த சுமேரியர்களுடையது தான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த சுமேரிய நாகரீகமானது கி.மு.6000 அல்லது 7000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று H.G.Wells தன்னுடைய A History of the world என்னும் நூலில் கூறுகிறார்.
நூஹ் நபியின் பிரச்சார தலைநகர் மெசப்பொட்டோமியாவாக இருந்தது என அபுல் கலாம் ஆஸாத் குர்ஆன் தஃப்ஸீரில் குறிப்பிடுகிறார்.
நூஹ்(அலை) அவர்கள் ஏக தெய்வக் கொள்கையைப் போதித்த போது மிகச் சொற்பமானவர்களே ஏற்றுக் கொண்டனர். மிகப் பெரும்பான்மையினர் வழிகேட்டிலேயே இருந்தனர். இதனால் நூஹ்வையும் அவரைப் பின்பற்றியவர்களையும் கப்பலில் பயணம் செய்யக்கட்டளையிட்டு நிராகரிப்போர்களை பிரளயத்தால் அழித்தான். முடிவில் நீர்வற்றி கரை தென்பட்டபோது நூஹுடைய கப்பலானது ஜூதி (அரராத்) என்னும் மலையில் தங்கியது.
கப்பலிலிருந்து வெளியேறிய நூஹின் சந்ததிகள் பூமியின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறி தங்கள் சந்ததிகளைப் பெருக்கிக் கொண்டனர்.
இந்த தூஃபான் பிரளயம் குறித்து குர்ஆனும் ( 71:22-26, 21:76,77) பைபிளின் பழைய ஏற்பாடும் ஆதியாகமம் (அத்தியாயம் 6-9), இந்து வேதம் பவிஷிய புராணமும் (பிரதிசர்ஹபர்வ 1:4) கூறுகின்றன. இவ்வாறு இஸ்லாமிய கிறித்தவ இந்து வேதங்கள் தவிர புராதனமான நூல்களிலும் இது குறித்துக் குறிப்புகள் காணப்படுகின்றன.
950 ஆண்டுகள் வாழ்ந்த நபி நூஹ்(அலை) அவர்களே சுமேரியராகவும், சுமேரிய நாகரிகத்தின் தந்தை என்றும் வரலாறு வர்ணிக்கப்படுகிறது. சுமேரிய நாகரிகத்திற்குப்பிறகே மற்ற பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் தோன்றின. என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.
சந்ததிகள்
நோவாவுடைய சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புத்திரராகள் மூலமாகவே மனித சமுதாயம் மீண்டும் பரவத் தொடங்கியது என்று பைபிள்ஆதியாகமம் கூறுகிறது.
மஹா நுவ்வுடைய சமூகத்தார்களில் முக்கியமானவர்களான ஷாம், ஹாம், யாகுத் என்னும் பெயர்களில் அறியப்படுகின்றவர்கள் மூலமாகவே மீண்டும் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது என்று பவிஷிய புராணம் கூறுகிறது.நோவாவுடைய சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புத்திரராகள் மூலமாகவே மனித சமுதாயம் மீண்டும் பரவத் தொடங்கியது என்று பைபிள்ஆதியாகமம் கூறுகிறது.மஹா நுவ்வுடைய சமூகத்தார்களில் முக்கியமானவர்களான ஷாம், ஹாம், யாகுத் என்னும் பெயர்களில் அறியப்படுகின்றவர்கள் மூலமாகவே மீண்டும் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது என்று பவிஷிய புராணம் கூறுகிறது.
1. ஹாம்
நூஹுடைய குமாரர் ஹாம் மூலமாக உருவாகியதே பண்டைய எகிப்து நாகரீகமாகும்
2. ஸாம்
இவர் மூலமாகவே அரேபியா,சிரியா,ஈராக் நாகரீகம் உருவானது. பாபிலோனியா, அசீர்யா,கால்தியா. பினீசியா நாகரீகங்களும் உருவாயின.
நோவாவுடைய சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புத்திரராகள் மூலமாகவே மனித சமுதாயம் மீண்டும் பரவத் தொடங்கியது என்று பைபிள்ஆதியாகமம் கூறுகிறது.மஹா நுவ்வுடைய சமூகத்தார்களில் முக்கியமானவர்களான ஷாம், ஹாம், யாகுத் என்னும் பெயர்களில் அறியப்படுகின்றவர்கள் மூலமாகவே மீண்டும் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது என்று பவிஷிய புராணம் கூறுகிறது.நூஹுடைய குமாரர் ஹாம் மூலமாக உருவாகியதே பண்டைய எகிப்து நாகரீகமாகும்இவர் மூலமாகவே அரேபியா,சிரியா,ஈராக் நாகரீகம் உருவானது. பாபிலோனியா, அசீர்யா,கால்தியா. பினீசியா நாகரீகங்களும் உருவாயின.இப்றாஹீம் நபியின் சந்ததிகளும் ஸாம் வழி வந்தவர்கள். இவர்களை ஸாம் சந்ததியர்கள் (செமிட்டிக்குகள்-ஸாம், சந்ததியினர்) என வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்.
3. யாபித்
யாபிதின் குமாரர்கள் தீவுகளுக்குச் சென்று குடியேறினர். இவர்களே இந்தியாவுக்கும் வந்திருக்க வேண்டும். இந்தியாவும் ஒரு தீவு தான்.
4. நுஃபூர்
அரபி வரலாற்றாசிரியரும் உலகப்பயணியுமான அலி இப்னுல் ஹுஸைன் அல்-மஸ்வூதி, (கி.பி 956) தன்னுடைய ‘முரூஜுத் தஹப் வ மஆதினுல்
ஜவ்ஹர்’ என்னும் உலக வரலாற்நு நூலில் ‘நூஹுடைய மற்றொரு குமாரனாகிய நுஃபூர் தன்னுடைய சந்ததிகளுடன் சிந்து நோக்கி பயணமாகி அங்கே
தங்கினார். சிந்து நதிக்கரையினில் வாழ்ந்த ஆதி வாசிகள் நுஃபூருடைய சந்ததிகளேயாவார்கள் என்றும்,
மேலும் அதே நூலில் மற்றொரு இடத்தில் நூஹுடைய மகன் யாப்பேத், அவருடைய மகன் ஸுபேல்(துஃபேல்) அவருடைய மகன் அபூர் அல்லது
அமூர் சிந்து சென்று தங்கி தங்கள் சந்ததிகளைப் பெருக்கி பரவி வாழ்ந்தனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.(யாபிதி
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸாம் : அரபுகளின் தந்தை என்றும் ஹாம் அபிசீனியர்களின் தந்தையென்றும் யாபித் உரோமர்களின் தந்தை என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் :
ஸமுரா(ரலி) ஆதாரம் அஹ்மத்
திராவிடர்கள்
புராதனமான காலங்களில் குலத்தலைவன் பெயரில் தான் குலம், கோத்திரம் உருவாகும். செமட்டிக் வம்சம் ‘ஸாம்’ என்னும் குலத்லைவன் பெயரில் உருவானது போல யாபிதின் பெயரால் திராவிடர் குலம் உருவானது. ‘திரு’ என்னும் அடைமொழிச் சொல் பண்டைய இலக்கியங்களில் சிறப்பைக்காட்டப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். யாப்பித் என்னும் பெயருக்கு முன்னால் திரு சேர்க்கப்படும் போது ‘திருயாபித’ என்றாகிறது. அதுவே ‘திராவிடர்’ என என மறுவியிருக்கலாம்.
இறை தூதர்கள்-தீர்க்கதரிசிகள் – என்று சொல்லப்படுபவர்களைத்தான் மனுக்கள் என்று இந்து கிரந்தங்கள் குறிப்பிடுகின்றன.
மனுக்கள் அநேகம் பேர் உண்டு. மனுக்கள் மானிட சமுதாயத்தின் பிதாமகன் ஆவார். சமுதாய நெறியை விட்டும் புறம்பாகச் செல்லாது காத்து வந்த தெய்வீக புருடர்களே மனுக்கள். எகிப்து, பாரசீகம், கிரேக்கம், ரோமாபுரி முதலிய நாடுகளுக்கு தர்ம சாத்திரங்கள் வகுத்துக் கொடுத்தவர்கள் அந்நாட்டு மனுக்கள் ஆவார்கள். என்று இந்து புராணங்கள் கூறுகின்றன. (மனுதர்ம சாஸ்திரம்) பக்கம் 5 பைபிள் கூறும் நோவாவும், குர்ஆன் கூறும்
நூஹும்,பவிஷ்ய புராணம் கூறும் மஹா நுவுவும் ஒருவரே. ‘நுவு’ என்னும் பெயருக்கு முன்னால் மஹா (Great) என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு ‘ மஹா நுவு’ என்று கூறப்பட்டு அதுவே பிறகாலத்தில் மருவி ‘மநு’ வாகியது. என்றும் கூறப்படுகிறது. எனினும் மநுக்கள் அநேகம் பேர் உண்டு என்றும் குறிப்பிட்டது மஹாநுவுக்குப்பின் வந்த இறைத்தூதர்களையாகும்.
இந்த மனுக்களை சத்திய வரதன் (உண்மையாளர்) என மஹாபாரதம் கூறுகிறது. இதிலிருந்து மநு திராவிடர்களுடைய பெரிய குலத்தலைவராக இருந்தார் எனப் புரிந்து கொள்ளலாம்.
சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ஆதிவாசிகளின் (திராவிடர்களின்) கடவுள் கொள்கை ஏக தெய்வக்கொள்கையாகத்தான் இருந்தது என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சுமேரிய நாகரிகத்தந்தை நூஹ்வின் கொள்கை ஏக தெய்வக்கொள்கை யாகத்தானிருந்தது. அதுபோல நூஹவின் குமாரர் யாபிதின் மூலமாக உருவான திராவிட சமூகத்தின் கொள்கையும் ஏக தெயவக் கொள்கைதான் என்பதில் வரலாற்றாசிரியர்களிடேயே கருத்து ஒற்றுமை உள்ளது.
‘ஓம்’ என்பது திராவிடர்களின் கடவுளின் பெயராகும். ‘தீதிவிகன்’ அக்கடவுளின் குணங்களில் ஒன்றாகும் என்று மௌலானா ஆபுல் கலாம் ஆஸாத் தம்முடைய தஃபஸீருல் குர்ஆனில் கூறியுள்ளார். சமஸ்கிருதத்தில் ‘ஓம்’ என்பதன் துல்யமான பொகுள் ‘இந்துவான்’ அதாவது ‘ஏகன்’ ஆகும். அந்த கடவுளுடைய அதிகாரம் ‘ சகல வர்க்கங்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்’ அவனுடைய கட்டளைக்குக் கட்டுப் பட்டே சர்வ தேவர்களும் நடக்கின்றனர்.
‘தீதிவிகன்’ அவனுடைய ஒரு குணம் ஆகும். ‘எந்நிலையிலும் உறங்காது கண்காணிப்பவன்’ என்பது பொருள்.
மிக ஆழமான உழைப்பு.
ReplyDelete