Sep 30, 2012

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்


வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

தொடர்ச்சியான காலப்பகுதிகளில் நோன்புபிடிப்பதால் மூளையைச்சிதைக்கின்றநோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறமுடியும் என அமெரிக்க விஞ்ஞானிகளின்ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில்குறித்த காலப்பகுதியில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் அல்ஸ்ஹைமர்ஸ், பார்கின்ஸோன்ஸ் போன்ற நோய்களிலிருந்தும்,ஏனைய கொடிய நோய்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறமுடியும் என அமெரிக்காவின் போல்டிமோர் பிரதேசத்தில் அமைந்துள்ள மூப்படைதலுக்கான தேசிய நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
"கலோரி உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்வது மனிதமூளைக்கு அனுகூலமாக அமையமுடியும்,எனினும் உணவில் கட்டுப்பாட்டைக்
கொண்டுவருவது இதற்கான சிறந்தமுறையாக அமையாது. மாறாக,அளவான உணவை உட்கொண்டு நோன்புபிடிப்பதேஇதற்கான சிறந்தமுறையாகும்" என நரம்புவிஞ்ஞான ஆய்வுகூட நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மாக்ஸ்மக்ஸன் வான்கூவர் நகரில்
நடைபெற்ற உயர் விஞ்ஞானத்துக்கான அமெரிக்க சங்கத்தின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள் கொஞ்சம்சேர்க்கப்பட்ட சிறிதளவான உணவையும்,தேநீரையும் உட்கொள்வதன் மூலம் நாளந்த உணவின் கலோரிப் பெறுமானத்தை 500க்கு குறைக்க முடியமாவதுடன், ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டுநாட்களில் இப்படியாகச் செய்வதன் மூலம் சிறந்தவொரு பெறுபேறு கிடைக்கப்பெறும் என அமெரிக்காவின் போல்டிமோர் பிரதேசத்தில் அமைந்துள்ள மூப்படைதலுக்கானதேசிய நிறுவனத்தின் ஆய்வில் கிடைக்கப்பெற்ற தெளிவானமுடிவு சான்றுபகர்கின்றது.

சில வேளைகளில் குறைந்த கலோரியைக் கொண்டுள்ள உணவுகள் வாழ்க்கைக்கு நீண்ட ஆயுளைத்தரவள்ளது என விஞ்ஞானிகளால் அறியப்பெற்றுள்ளது. எலிகளுக்கு குறைந்த கலோரியுள்ள உணவுகளை வழங்கி செய்யப்பட்ட ஆய்வில் அவற்றின் ஆயுட்காலம் 40சதவீதத்தால் உயர்வடைந்து காணப்பட்டது.இவ்வாறே மனிதன் போன்ற விலங்கினங்களுக்கும் இது பொருந்தும் என அறியப்பட்டுள்ளது.


நோன்புபிடிப்பதனால் மனிதனுக்கு பலவிதமான சுகாதார அனுகூலங்கள் கிடைக்கின்றது என முன்னைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.வாரத்தில் ஒன்று அல்லது இரண்டுநாட்களில் நோன்புபிடிப்பதால் மனிதனுக்கு சில கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்புப்பெறமுடிவதுடன், அது அவனது ஆயுளையும் அதிகரிக்கவல்லது என இப்புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

இதேவேளை புனிதஇஸ்லாம் மார்க்கத்தில்,வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைநாட்களில் சுன்னத் நோன்புகள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...