Oct 12, 2012

வங்கதேசத்தில் கடும் புயல்: 20 பேர் பலி



தெற்காசிய நாடுகள் புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த 2 தினங்களாக புயல் காற்றுடன் மழை கொட்டியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நோகாலி மற்றும் போலோ மாவட்டங்கள் புயலால் பெரிதும் சேதமடைந்தன. இந்த புயல் காரணமாக வங்கதேசத்தில்
இதுவரை 20 பேர் உயிரழந்துள்ளனர்.
இதில் 16 பேர் நோகாலி மாவட்டத்தையும், 4 பேர் போலா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளை காணவில்லை. குடிசை வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
தொலைபேசி மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...