நியாமி,அக்.13-
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் பெரும்பாலான பகுதிகளில் பெருகியுள்ள வெள்ளத்தால் 91 பேர் பலியானதாக அந்நாட்டின் அமைச்சரவை இயக்குனர் அகாலி அப்தோல்காடர் தெரிவித்தார். மேலும், வெள்ளம் காரணமாக அங்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
டில்லாபெரி, டோசோ, நியாமி உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள், பள்ளிக்கூடங்கள், நீர் நிலைகள், சாலைகள், பாலங்கள், அணைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் அப்தோல்காடர் மேலும் கூறினார்.
அங்குள்ள நைஜர் ஆற்றுப்பள்ளத்தாக்கில் 12 நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் விவசாயம் செய்யப்பட்டு வரும் 3,050 ஹெக்டேர் விவசாய நிலமும் ஆற்றுவெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

No comments:
Post a Comment