Oct 12, 2012

அமைதி, ஜனநாயகத்தை வளர்த்ததற்காக ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் பரிசு



ஆஸ்லோ : ஐரோப்பிய நாடுகளில்  அமைதி, ஜனநாயகத்தை மேம்படுத்தியதற்காக ஐரோப்பிய யூனியனுக்கு இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், மைக்ரோப்சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரின் பெயர்களும் இதில்
உலா வந்தன.

ஆனால், யாருமே எதிர்பார்க்காமல், இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு, ஐரோப்பிய யூனியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் தோர்ப்ஜோயெர்ன் ஜாக்லாண்டு கூறுகையில், ‘‘ஐரோப்பாவில் கடந்த 60 ஆண்டுக்காலமாக அமைதி, இணக்கமான சூழ்நிலை, ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக ஐரோப்பிய யூனியன் பாடுபட்டுள்ளது. அதன் சேவையை பாராட்டும் விதத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசுக்கு அந்த அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

 1957ம் ஆண்டில் 6 நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அமைப்புதான் ஐரோப்பிய யூனியன். தற்போது, ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இவற்றில் 50 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த அமைப்பில் சேர்வதற்காக மேலும் பல நாடுகள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 55 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளன. ஐரோப்பிய யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதை பெற்றுக் கொள்ள ஐரோப்பிய யூனியனில் உள்ள எந்த நாடு ஒப்புதல் அளித்தது என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...