லாகூர், அக். 21-
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் ஒரே நேரத்தில் 15 ஆயிரத்து 243 பேர் தேசியகீதம் பாடினர். அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. அந்த சாதனையை முறியடிக்க பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 42 ஆயிரத்து 813 பேர் பாடினர்.
அங்குள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் லாகூரில் தேசிய ஆக்கி ஸ்டேடியத்தில் பஞ்சாப் இளைஞர் விழா நடந்தது. அங்கு திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடினர்.
இந்த நிகழ்ச்சி பஞ்சாப் முதல்-மந்திரி முகமது ஷபாஷ் ஷரீப் முன்னிலையில்
நடந்தது. இதற்காக அங்கு பல மணி நேரம் தேசிய கீதத்தை பாடி ஒத்திகை பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 42 ஆயிரத்து 813 பேர் பங்கேற்றதாக கின்னஸ் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் டி.வி.யில் அறிவித்தனர். ஆனால் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டதா? என இன்னும் அறிவிக்கவில்லை. நடுவரின் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது

No comments:
Post a Comment